

‘வார்தா’ புயல் கடந்த மாதம் சென்னையை தாக்கியது. இதில், பல ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. பெரும்பாலான மரக் கழிவுகள் அகற்றப்பட்டு விட்டன. மெரினா கடற்கரையில் உள்ள எழிலகத்தில் மரக்கழிவுகள் குவித்து வைக்கப்பட்டு இருந்தன. இந்த மரக்கழிவில் நேற்று காலை 8.43 மணிக்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து, தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
திருவல்லிக்கேணி, எழும்பூரில் இருந்து 2 வாகனத்தில் விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். தீ விபத்து குறித்து அண்ணா சதுக்கம் போலீஸார் விசாரிக்கின்றனர்.