Published : 01 Feb 2017 10:42 AM
Last Updated : 01 Feb 2017 10:42 AM

சேலத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு குழந்தை பலி

சேலத்தில் பன்றிக் காய்ச்ச லால் பாதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தது. பன்றிக் காய்ச்சல் பாதிக்கப் பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சேலம் அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட் டுள்ளது.

சேலம் அம்மாப்பேட்டையைச் சேர்ந்த சபரி கணேஷ், சங்கீதா தம்பதியின் ஒன்றரை வயது குழந்தை சாய் ரக்சன். கடந்த வாரம் சாய் ரக்சனுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதித்த மருத்து வர்கள், சாய் ரக்சனுக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பதாக தெரிவித் தனர். மேலும், அதற்கான சிகிச்சை தொடர்ந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை குழந்தை உயிரிழந்தது.

இதுகுறித்து சேலம் மாநகர நல அலுவலர் டாக்டர் செல்வ குமார் கூறும்போது, “சேலம் மாநகரில் உள்ள சுகாதார மையங் களில் காய்ச்சல் அறிகுறிகளுடன் வருபவர்களைப் பரிசோதித்து, அவர்களுக்கு எந்த வகையான காய்ச்சல் என்பதை அறிந்து உரிய சிகிச்சை அளித்து வருகி றோம். இதுவரை எவருக்கும் பன்றிக் காய்ச்சல் அறிகுறி கண்டறியப்படவில்லை. பன்றிக் காய்ச்சல் காற்றின் மூலமாக பரவக்கூடியது.

காய்ச்சல் வந்தால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் காய்ச் சலின் தன்மையை அறிந்து சிகிச்சை அளிக்க முடியும். உயிரி ழந்த குழந்தை சாய் ரக்சனுக்கு நிமோனியா காய்ச்சலுடன் பன்றிக் காய்ச்சலும் தாக்கியுள்ளது. குழந் தையின் பெற்றோர், அவர்களது உறவினர் என 13 பேரை பரி சோதித்து, அவர்களுக்கு முன் னெச்சரிக்கையாக ‘டாமி ஃபுளூ’ மாத்திரைகளை கொடுத் துள்ளோம்” என்றார்.

இதனிடையே, ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர் ஆறுமுகம் என்பவரின் ஒன்றரை வயது மகள் சுப, பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் சேலம் அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட் டுள்ளார்.

இதுகுறித்து மருத்துவமனை டீன் கனகராஜ் கூறும்போது, “சுபக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதால், பரி சோதனை நடத்தப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து பரி சோதனை முடிவுகள் ஓரிரு நாட் களில் வந்துவிடும். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வரு கின்றனர்.

பன்றிக் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க சேலம் அரசு மருத்துவ மனையில் 8 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு வார்டு அமைத்துள்ளோம். குழந்தைகள் நல மருத்துவர், நுரையீரல் சிறப்பு மருத்துவர், மயக்கவியல் நிபுணர் என 3 சிறப்பு மருத்துவர்கள் குழு தலைமையில் இந்த வார்டு செயல்பட்டு வருகிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x