

உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக் கறிஞராக இருந்துவந்த சண்முக வேலாயுதம், கடந்த சில வாரங் களுக்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், இப்பதவிக்கு வழக்கறிஞர் ஆர்.ராஜரத்தினத்தை, நியம னம் செய்து அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.ராஜரத்தினம்(56) சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 1985 முதல் வழக்கறிஞராக தொழில் புரிந்து வருகிறார். திருச்சி மண்ணச்சநல்லூர் இவரது பூர்வீகம். இவரது தந்தை மறைந்த ஆர்.ராஜகோபாலன் மாவட்ட அமர்வு நீதிபதியாக பணியாற்றிய வர். அதேபோல, இவரது தாய் வழி தாத்தா எஸ்.ஏ.அய்யாச்சாமி முதன்மை தலைமை குற் றவியல் நடுவராக பணியாற்றி யவர்.
ஆர்.ராஜரத்தினம், சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பி.குமாரிடம் ஜூனிய ராகவும், தனியாகவும் வழக்கு களை நடத்தி வந்தார். குறிப்பாக தமிழக முதல்வரின் பெங்களூரு வழக்கில் குமாருக்கு பக்கபலமாக செயல்பட்டவர். மேலும் குற்றவியல் வழக்குகள், ஆட்கொணர்வு வழக்குகள், குற்றவியல் மேல்முறையீடு, குற்றவியல் மறுஆய்வு, சிபிஐ வழக்குகள், சிறப்பு குற்றவியல் வழக்குகளில் அனுபவமிக்கவர் என்பது குறிப்பிடத்தக்கது.