ஆசிரியர் நியமனத்தில் 3-வது தேர்வு பட்டியல் வெளியீடு

ஆசிரியர் நியமனத்தில் 3-வது தேர்வு பட்டியல் வெளியீடு
Updated on
1 min read

ஆசிரியர் நியமனத்தின் 3-வது தேர்வு பட்டி யல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) நேற்று வெளியிடப்பட்டது.

அரசு பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நிய மனத்தில் முதல்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து கடந்த 14-ம் தேதி 2-வது தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டது.

அதில், சிறுபான்மை மொழி பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை பள்ளிகள், ஆதி திராவிடர் நலத் துறை பள்ளிகள், சென்னை, கோவை மாநகராட்சி பள்ளிகளுக்கு தேர்வான பட்டதாரி ஆசிரியர்கள் இடம்பெற்றிருந்தனர்.

இந்த நிலையில், ஆசிரியர் நியமனத்தின் 3-வது தேர்வு பட்டி யல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) நேற்று வெளியிடப்பட்டது. அதில், சிறுபான்மை மொழி இடை நிலை ஆசிரியர்கள் மற்றும் பிற் படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை பள்ளிகளுக்கான இடைநிலை ஆசிரியர்கள் பட்டியல் இடம்பெற் றுள்ளது என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர்-செயலர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in