

திருத்தணி மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்பு
திருத்தணியில் கழிவு நீர் குளமாக உருமாறி வரும் நல்ல தண்ணீர் குளத்தை சீரமைக்கும் பணியினை இளைஞர்கள் தொடங்கினர். இது, பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருத் தணி காந்தி சாலையில் 50 ஆண்டு கள் பழமையான நல்ல தண்ணீர் குளம் அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக திருத்தணிவாசிக ளின் தாகம் தீர்த்த இந்த குளம், பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமலும், சீரமைக்கப்படாமலும் இருந்து வருகிறது. இதனால் கழிவு நீர் குளமாக உருமாறி வருவதோடு, குளத்தின் பல பகுதிகள் ஆக்கிர மிப்புக்குள்ளாகி வருவதாகவும் பொதுமக்கள் மத்தியில் கூறப்படு கிறது.
ஆகவே, நல்ல தண்ணீர் குளத்தை தூர்வாரி, சீரமைக்க வேண்டும். குளத்தில் படகு சவாரி விட வேண்டும் என திருத்தணி நக ராட்சி நிர்வாகத்திடம் பல முறை பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் பலனில்லை.
இந்நிலையில், சமூக இணைய தளங்கள் வாயிலாக இணைந்த திருத்தணி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் 200-க்கும் மேற் பட்டோர் நல்ல தண்ணீர் குளத்தை சீரமைக்க முடிவு செய்தனர். அதன்படி திருத்தணி இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி அரசு கலைக்கல்லூரி தேசிய மாணவர் படை மாணவர்கள், டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேனிலை பள்ளி மாணவர்கள் என இரு நூறுக்கும் மேற்பட்டோர் குளத்தை சீரமைக்கும் பணியினை கடந்த 3-ம் தேதி தொடங்கினர்.
இரு நாட்கள் தொடர்ந்த இந்த பணியை பார்த்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் சம்பந்தப்பட்ட இளைஞர்கள், மாணவர்களை வெகுவாக பாராட்டியதோடு, தங்கள் ஒத்துழைப்பினையும் நல்கு வதாக உறுதியளித்துள்ளனர். பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச் சியை ஏற்படுத்தியுள்ள இளைஞர்கள், மாணவர்கள் நல்ல தண்ணீர் குளத்தை சீரமைக்கும் பணியை வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணியில் இருந்து மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவித்துள்ளனர்.