

தமிழகம் முழுவதும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ சத்து மருந்து வழங்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்க இருப்பதாக மாநில சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாநில சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
5 மாதம் முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ சத்து மருந்து வழங்கும் பணி 6 மாதங்களுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. இப்பணி வரும் செவ்வாய்க்கிழமை அன்று தொடங்குகிறது. இப்பணியில் சுகாதாரத்துறை சார்பில் 10 ஆயிரம் பணியாளர்களும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் 50 ஆயிரம் பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இத்திட்டத்தின் கீழ் 60 லட்சம் குழந்தைகள் பயன்பெறுவர். 5 முதல் 11 மாத குழந்தைகளுக்கு 1 மி.லி அளவு மருந்தும், அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 2 மி.லி மருந்தும் வழங்கப்பட உள்ளது.
அக்டோபர் 7,9,10,11 ஆகிய தேதிகளில் வீடு வீடாக சென்று குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ மருந்து வழங்க இருக்கிறோம். விடுபட்ட குழந்தைகளுக்கு அடுத்த வாரத்தில் ஒரு நாள் மருந்து வழங்க திட்டமிட்டிருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
5 முதல் 11 மாத குழந்தைகளுக்கு 1 மி.லி அளவு மருந்தும், அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 2 மி.லி மருந்தும் வழங்கப்பட உள்ளது.