

தமிழகத்தில் உள்ள அனைத்து வணிகர்களும் உடனடியாக ஜிஎஸ்டி இணையதளத்தில் தங்கள் விவரங்களை மின் கையெழுத் துடன் பதிவு செய்துகொள்ள வேண்டும் என வணிகவரித்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் இந்த வரித்திட்டத்தை அறிமுகப்படுத்த, சட்டப்பேரவையில் உரிய சட்டம் கொண்டுவர வேண்டும். இதற்கான மசோதா தயாரிக்கப்பட்டு சட்ட மசோதா, விரைவில் கூட உள்ள மானிய கோரிக்கைகளுக்கான கூட்டத் தொடரில் கொண்டுவரப்பட உள்ளது.
இந்நிலையில், ஜிஎஸ்டி வரி விதிப்புக்காக ஏற்கெனவே நடந்து வரும் பணிகள் தொடர்பாக வணி கர்களுக்கு சில அறிவுறுத்தல் களை வணிகவரித்துறை வெளி யிட்டுள்ளது. அதில் கூறியிருப்ப தாவது:
ஜிஎஸ்டி வரிக்கான தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு மற்றும் மென்பொருள் உருவாக்கும் பணியை சரக்கு மற்றும் சேவை கட்டமைப்பு நிறுவனம் மேற்கொண் டுள்ளது. இந்த நிறுவனம் ஜிஎஸ்டி தொடர்பாக www.gst.gov.in என்ற இணையதளத்தை உருவாக்கி உள்ளது.
தமிழகத்தில் வரி செலுத்து வோர் அடையாள எண் (டின்) பதிவு பெற்ற அனைத்து வணிகர் களும் தாங்களாகவே இந்த இணையதளத்தில் பதிவு செய்து வருகின்றனர். கடந்த ஜனவரி 4-ம் தேதி முதல் இந்த பதிவுக்கான வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் பதிவுசெய்ய தற்காலிக ஐடி மற்றும் கடவுச் சொல் (பாஸ்வேர்டு) வணிகர் களுக்கு மின்னஞ்சல் மற்றும் வணிகவரித்துறை http://ctd.tn.gov.in இணையதளம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
வணிகர்கள் இந்த தற்காலிக ஐடி மற்றும் கடவுச்சொல்லுடன் இணையதளத்தை பயன்படுத்தி பதிவுசெய்து வந்தனர். இந்நிலை யில் கடந்த மே 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை தற்காலிகமாக ஜிஎஸ்டி பதிவு செய்யும் இணைய தளம் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த இணையதளம் மீண்டும் ஜூன் 1-ம் தேதி (நேற்று முன்தினம்) முதல் திறக்கப்பட்டுள்ளது. சரக்கு மற் றும் சேவை வரி அமல்படுத்தப்படு வதை முன்னிட்டு அனைத்து வணி கர்களும் ஜிஎஸ்டி இணையதளத் தில் இணையும் வசதி நாடு முழுவதும் ஜூன் 15-ம் தேதி முடிகிறது.
தமிழ்நாடு வணிகவரித் துறை யில் பதிவுபெற்ற வணிகர்கள் அனைவரும் நிறுவனங்கள் என் றால் ஜிஎஸ்டி இணைய தளத்தில் மின் கையொப்ப சான்றிதழ் (டிஎஸ்சி) பதிவு செய்ய வேண்டும். உரிமையாளர் அல்லது பங்குதாரர் என்றால் ஆதார் எண் உதவியுடன் மின் கையொப்பமிட்டு தங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
ஏற்கெனவே ஜிஎஸ்டி இணைய தளத்தில் விவரங்கள் பதிவு செய்த பெரும்பாலான வணிகர்கள் மின் கையொப்ப சான்றிதழ், மின் கையொப்பத்துடன் பதிவு செய்யவில்லை.
எனவே, அனைத்து வணிகர் களும் உடனடியாக ஜிஎஸ்டி இணையதளத்தில் தங்கள் விவரங் களை மின் கையொப்ப சான்றிதழ், மின் கையொப்பத்துடன் பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
இது தொடர்பாக வணிகவரித் துறை அதிகாரி ஒருவர் கூறிய தாவது:
ஜிஎஸ்டி வரியை ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத் தில் 6 லட்சத்து 50 ஆயிரம் பதிவு செய்த வணிகர்கள் உள்ளனர். இவர்களில் 86 சதவீதம் பேர் தற் போது ஜிஎஸ்டி இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள 14 சதவீதம் வணிகர்கள் மற் றும் புதிய வணிகர்கள், டிஜிட் டல் கையொப்பம் பதிவு செய் யாதவர்கள் 15 நாட்களுக்குள் இதில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.