செங்கல்வராய அறக்கட்டளை சார்பில் எஸ்எஸ்சி தேர்வுக்கு பயிற்சி: ஜூன் 11-ல் அறிமுக வகுப்பு

செங்கல்வராய அறக்கட்டளை சார்பில் எஸ்எஸ்சி தேர்வுக்கு பயிற்சி: ஜூன் 11-ல் அறிமுக வகுப்பு
Updated on
1 min read

செங்கல்வராய நாயக்கர் அறக் கட்டளையின்கீழ் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையத்தின் கவுரவ இயக்குநரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான எஸ்.எஸ்.ஜவகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வருமானவரி ஆய்வாளர், மத்திய அரசின் துறைகளில் உதவி பிரிவு அதிகாரி, சிபிஐ ஆய்வாளர், உதவி ஆய்வாளர், கடத்தல் மற்றும் போதைப்பொருள் தடுப்பு அதிகாரி உட்பட பல்வேறு பதவிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இத்தேர்வை பட்டதாரிகள் எழுத லாம். இதற்கான முதல்கட்ட தேர்வு (டயர்-1) ஆகஸ்ட் 1 முதல் 20 வரை நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 16-ம் தேதி ஆகும். பொதுவாக எஸ்எஸ்சி தேர்வுகள் குறித்து தமிழக மாணவர்களிடம் விழிப்புணர்வு இல்லை. இத்தேர் வெழுதி மத்திய அரசு பணியில் சேரலாம். ஆனால், இதுகுறித்து மாணவர்களிடம் அவ்வளவாக ஆர்வம் இல்லை.

எனவே, மத்திய அரசு பணி களில் சேர வகை செய்யும் எஸ்எஸ்சி போட்டித் தேர்வு குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையில் செங்கல்வராய நாயக்கர் அறக்கட் டளை சார்பில் அறிமுக வகுப்பு ஜூன் 11-ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) காலை 11 மணிக்கு வேப் பேரி ஈவிகே சம்பத் சாலையில் உள்ள செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை சிறப்பு மையத்தில் நடைபெற உள்ளது. அறிமுக வகுப்பை தொடர்ந்து எஸ்எஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சியும் அளிக்கப்பட இருக்கிறது. இது தொடர்பாக கூடுதல் விவரங்கள் அறிய 044-26430029 என்ற தொலைபேசி எண்ணில் அல்லது 98842-93051 என்ற செல்போன் எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in