

பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகள் கட்டுவதைக் கண்டித்து கோவை வழியாகச் செல்லும் செங்கப்பள்ளி - கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாநில எல்லையோர கிராமமான எட்டி மடையில் எல்லை மாகாளியம்மன் கோயில் அருகே நேற்று காலை 9 மணியளவில் சாலை மறியல் போராட்டம் தொடங்கியது.
பவானி ஆறு தடுப்பணை கள் தடுப்புக் குழு ஒருங்கிணைப் பாளரும், தபெதிக பொதுச் செய லாளருமான கு.ராமகிருட்டிணன் தலைமை வகித்தார். திமுக, காங்கி ரஸ், தமாகா, விடுதலை சிறுத்தை கள் கட்சி, கொமதேக, கொஜக, அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக்குழு, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, மே 17 இயக்கம், காவிரி நீர் பாது காப்புக்குழு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட அமைப்புகள் பங்கேற் றன.
கு.ராமகிருட்டிணன் பேசும் போது, ‘‘ஆண்டுக்கு சுமார் 40 டிஎம்சி தண்ணீர் வழங்கக்கூடிய பவானி ஆறு, தமிழகத்தில் உருவாகி கேரளாவுக்குள் செல்கிறது. அது தடுக்கப்பட்டுள்ளதால் தற்போது நீர்வரத்து முற்றிலுமாக தடைபட்டுள் ளது. கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் என 4 மாவட்டங்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டு மானால் பவானி ஆறு மீண்டும் உயிர் பெற வேண்டும். அதற்கு தமிழக அரசும், மத்திய அரசும் வேகமாக நடவடிக்கை எடுத்து கேரள அரசின் தடுப்பணைத் திட்டத்தை தடுக்க வேண்டும்.
தேக்குவட்டை தடுப்பணையை கட்டி முடித்துவிட்டு, மஞ்சக்கண்டி யில் அடுத்த அணை கட்டும் பணி தொடங்கிவிட்டது. இனியும் அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், மக்களை ஒருங்கிணைத்து மேல் பவானியில் பவானி ஆறு உரு வாகும் தமிழகப் பகுதியில் அணை கட்ட முயற்சிப்போம். தமிழக அரசு தொடர்ந்துள்ள மனுவில் போது மான ஆதாரங்கள் இல்லை. எனவே, பவானி ஆறு தடுப்பணைகள் தடுப்புக்குழு சார்பில் அரசின் வழக்கோடு இணைந்து மற்றொரு வழக்கு தொடரப்படும். அதில் முழு ஆவணங்களையும் சமர்ப்பிக்க உள்ளோம்’’ என்றார்.
1,604 பேர் கைது
தேசிய நெடுஞ்சாலையில் மறிய லில் ஈடுபட்டதால் இரு மாநில போக்குவரத்தும் கடுமையாக பாதிக் கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட 165 பெண்கள் உட்பட 1,604 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திமுக துணைப் பொதுச்செய லாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, வெள்ளகோயில் சாமிநாதன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, கொங்குநாடு ஜனநாயகக் கட்சித் தலைவர் ஜி.கே.நாகராஜ், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ரயில் மறியல்
இதே கோரிக்கையை வலி யுறுத்தி கோவை மாநகரில் உள்ள வடகோவை ரயில் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தலைமையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்ததால் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதித்தது. இதில் 236 பேர், ‘தி கேரள கிளப்’பை முற்றுகையிட முயன்ற சமூக நீதிக் கட்சியினர் 9 பேர் என ஒட்டு மொத்தமாக 1,849 பேர் கைது செய்யப்பட்டனர்.
தா.பாண்டியன் வலியுறுத்தல்
ஈரோட்டில் நடந்த ரயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் தா.பாண்டியன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: பவானி ஆற்றில் தடுப்பணை கட்டும் செயலை காரணம் காட்டி தமிழக மக்களுக்கும், கேரள மக்களுக்கும் இடையே பகையுணர்வை வளர விட மாட்டோம். கேரள அரசு தடுப்பணை கட்டுவதை உடனடியாக கைவிட வேண்டும்.
கர்நாடக அரசு ஒகேனக்கல் அருகே தடுப்பணை கட்டுவதை யும், ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டு வதையும் தடுத்து நிறுத்த வேண்டும். காவிரி பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடி யாக அமைக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்றார்.