

அதிமுக அரசுக்கு நல்ல பெயர் வந்துவிட்டது என்ற அச்சம், பொறாமையால் ஆதாரமற்ற குற்றச்சாட்டை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழகத்தின் கடன் சுமை, நிதி நெருக்கடி பற்றி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்து முதல்வர் பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகம் சந்தித்துவரும் மிகப்பெரிய கடன்சுமை, நிதி நெருக்கடி பற்றி நிதி ஆயோக் கூட்டத்தில் நான் விவாதிக்க வில்லை என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். நிகழ்ச்சி நிரலில் இல்லாததாலேயே என் பேச்சில் அதுகுறித்து இடம்பெறவில்லை. எனினும், மாநில அரசின் கடன், நிதிநிலை பற்றி கடந்த பட்ஜெட் விவாதத்தில் மிக விரிவாக பேசப்பட்டது. கடன் அளவு மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 20.90 சதவீதம் மட்டுமே என நிதியமைச்சர் பதிலுரையில் தெரிவித்துள்ளார். நாட்டிலேயே குறைந்த அளவு கடன் வைத்துள்ள முதல் 5 மாநிலங்களில் தமிழகமும் ஒன்று.
தவிர, தேசிய அளவில் உரு வாக்கப்படவேண்டிய தொலை நோக்குத் திட்டம் பற்றி விவாதிப் பதுதான் கூட்டத்தின் முக்கிய நோக்கம். மறைந்த முதல்வர் ஜெயலலிதா உருவாக்கிய தொலைநோக்குத் திட்டம் பற்றி விரிவாகக் குறிப்பிட்டேன்.
கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘‘ஒரே நாட்டில் வாழ்ந்தா லும், சில நேரங்களில் நம் நாட்டைப் பற்றிய புரிதலின்றி இருக் கிறோம். பரஸ்பரம் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தி, மாநிலங் களை இணைக்க வேண்டும். வளம் மிக்க மொழி தமிழ். உண்மை யிலேயே, நம் நாட்டின் வளத்துக்கு தமிழ் வலிமை சேர்க் கிறது. தமிழகத்துடன் ஏதாவது ஒரு மாநிலம் ஏன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ளக் கூடாது? அந்த மாநிலத்தின் குழந்தைகள் 5 தமிழ் பாடல்களும், தமிழில் 100 வாக்கியங்களும் கற்றுக்கொள்ளட்டும். தமிழ் எழுத்துகளைப் பார்த்து புரிந்து கொள்ளட்டும். அந்த மாநிலத்தில் தமிழ் திரைப்பட விழா நடத்தலாம். இரு மாநில குழந்தைகள் இடையே விளையாட்டுப் போட்டிகள் நடத்த லாம். அந்த மாநிலக் குழந்தைகள் தமிழகத்துக்கு சுற்றுலா செல்லலாம்’’ என்றார். தமிழகம், தமிழ் மீது பிரதமர் வைத்துள்ள மதிப்பை அவரது பேச்சின்மூலம் அறிந்தேன்.
மேலும், ‘தொலைநோக்குத் திட்டம் 2023’ என்பது நீண்டகாலத் திட்டம். அதில் குறிப்பிட்டுள்ள பல திட்டங்களை சீரிய முறையில் இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. அதில் இதுவரை 85 திட்டங்களுக் கான பணிகள் தொடங்கப்பட் டுள்ளன. 17 திட்டங்கள் ஒப்பந்தப் புள்ளி கோரும் நிலையை அடைந்துள்ளன. 26 திட்டங்களுக்கு விரிவான திட்ட அறிக்கை, சாத்தியக்கூறு ஆய்வுகள் தயாரிக் கப்பட்டுள்ளன. ஏனைய 89 திட்டங்கள் பல்வேறு வடிவமைப்பு நிலைகளில் உள்ளன.
விவசாயிகளைப் பாதிக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எந்தவொரு அனுமதியையும் தமிழக அரசு வழங்காது என்பதை பலமுறை தெளிவுபடுத்தி உள்ளேன். இந்த முறை நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளும்போதும் விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக் கைகளை பிரதமருக்கு கடிதம் மற்றும் நேரிலும் வலியுறுத்தி னேன். இதை தெரிந்துகொள்ளா மல் ஸ்டாலின் அரசியல் நோக் கோடு குறை கூறியுள்ளார்.
தமிழகத்துக்கு முக்கியத் துவம் வாய்ந்த எந்த ஒரு பிரச்சினையையும் என் உரையில் எழுப்பவில்லை என்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. அதிமுக அரசுக்கு நல்ல பெயர் வந்துவிட்டது என்ற அச்சம், பொறாமையால் ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டை ஸ்டாலின் கூறியுள்ளார். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.