

சந்தன வீரப்பனின் 10-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று (அக். 18) அன்னதானம் நிகழ்ச்சி நடத்த அவரது மனைவி முத்துலட்சுமி ஏற்பாடுகளை செய்தார்.
எனினும் அன்னதான நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க முடியாது என சேலம் மாவட்டம் கொளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முத்துலட்சுமி மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “உயிரிழந்த தனது கணவனின் நினைவாக மனைவி நடத்தும் அன்னதான நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பது சரியல்ல.
ஆகவே, வீரப்பன் நினைவாக அவரது மனைவி முத்துலட்சுமி நடத்தும் அன்னதான நிகழ்ச்சிக்கு காவல் துறையினர் அனுமதி வழங்க வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டார்.