

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை தனக்கு உள்ள இறையாண்மை அதி காரத்தை வைத்து தமிழக அரசே விடுதலை செய்யலாம் என்று ஓய்வுபெற்ற நீதிபதி டி.அரிபரந் தாமன் தெரிவித்தார்.
திமுக தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்தநாள் மற்றும் சட்டப் பேரவை வைர விழாவையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத் தில், ‘நீதியரசர்கள் பார்வையில் கலைஞர்’ என்ற கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதில் முன்னாள் நீதிபதிகள் எஸ்.மோகன், ஏ.கே.ராஜன், கே.ஞானபிரகாசம், ஜி.எம்.அக்பர் அலி, டி.அரிபரந்தாமன் ஆகியோர் பங்கேற்று கருணாநிதி இயற்றிய மக்கள் நல சட்டங்கள் குறித்து நினைவு கூர்ந்தனர். கருத்தரங்கில் டி.அரிபரந்தாமன் பேசியதாவது:
ஒற்றை இந்தியா கருத்தை முன்வைக்கக் கூடிய இந்துத்துவா கருத்துகள் தற்போது எழுகின்றன. இந்தக் கொள்கையை தகர்ப்பதற் கான ஆயுதம் பெரியாரின் கருத்து கள்தான். ஒற்றை இந்தியா கருத்தை திணிக்கும் கட்சியை தோற்கடிக்க வேண்டும். 1967-ல் ஆட்சிக்கு வரு வதற்கு முன்னால் இருந்ததைபோல திமுக மாற வேண்டும்.
கல்வி மாநில பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு சென்றுவிட்டது. நீட் வேண்டாம் என தமிழக சட்டப்பேரவையில் சட்டம் இயற்றப்பட்டது. ஆனால், அதற்கு மத்திய அரசிடம் இருந்து பதிலே வரவில்லை. நீட் தேர்வை எதிர்த்து போராட்டம் நடத்த வேண்டும்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை தனக்கு உள்ள இறையாண்மை அதி காரத்தை வைத்து தமிழக அரசு விடுதலை செய்யலாம். ஆனால், இதுவரை அவ்வாறு செய்ய வில்லை. காந்தியை கொன்ற வழக் கில் ஆயுள் தண்டனை பெற்றவர் களை அப்போதைய அரசு விடு தலை செய்தது. ஆனால், தமிழர் கள் என்ற காரணத்துக்காக 7 பேரை விடுவிக்கவில்லை.
இந்திக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கும் 343 சட்டப்பிரிவை எரித்து திமுகவினர் பதவியை இழந்தனர். இன்றும் 343 சட்டப்பிரிவு தொடர்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் திமுக அமைப் புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக சட்டத்துறை தலைவர் ஆர்.சண்முகசுந்தரம், செயலாளர் ரா.கிரிராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்திக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கும் 343 சட்டப்பிரிவை எரித்து திமுகவினர் பதவியை இழந்தனர். இன்றும் 343 சட்டப்பிரிவு தொடர்கிறது.