

கருணாநிதி அறக்கட்டளை சார் பில் ரூ.3 லட்சம் நலிந்தோர் உதவித் தொகை நேற்று வழங்கப்பட்டது.
இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் நேற்று வெளி யிட்ட அறிக்கை:
திமுக தலைவர் கருணாநிதி, தனது சொந்த பொறுப்பிலிருந்து ரூ.5 கோடியை கருணாநிதி அறக்கட்டளைக்கு கடந்த 2005-ம் ஆண்டு அளித்தார். அது வங்கியில் வைப்பு நிதியாக செலுத் தப்பட்டது. 2005 முதல் 2007 வரை அந்த வைப்பு நிதி மூலம் கிடைக்கப்பெற்ற வட்டியில் இருந்து நலிந்தோர் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
2007-ம் ஆண்டு நடந்த புத்தகக் காட்சியை பார்வையிட சென்ற திமுக தலைவர் கருணாநிதி, வங்கியில் செலுத்தப்பட்ட ரூ.5 கோடி வைப்பு நிதியில் இருந்து ஒரு கோடியை தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப் பாளர் சங்கத்துக்கு அளித்தார். இதையடுத்து மீதம் இருந்த ரூ.4 கோடியில் இருந்து கிடைத்து வரும் வட்டியின் மூலம் நலிந்தோர் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இதுவரை ரூ.4 கோடியே 2 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள் ளது.
மேலும், 2016, ஜுலை மாதம் கிடைத்த வட்டியில் இருந்து 12 நலிந்தோர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.3 லட்சம் நிதியுதவியை கருணாநிதி நேற்று வழங்கினார்.
வெளியூரைச் சேர்ந்தவர்களின் பயணச் செலவை தவிர்ப்பதற்காக அவர்களுக்கு விரைவுக் காசோலை மூலம் உதவித்தொகை அனுப்பப்பட்டது.