

வழக்கறிஞர்கள் சட்டம் 1961-ல் புதிய சட்ட திருத்தம் கொண்டுவர சட்ட ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இதன் அடிப்படையில் வழக்கறிஞர்கள் சட்டத்தில் புதிய திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான வரைவு சட்ட திருத்தம் கடந்த வாரம் வெளியானது. இதற்கு அகில இந்திய பார் கவுன்சில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த சட்ட திருத்தத்தைத் திரும்பப் பெறக்கோரி இந்தியா முழுவதும் வழக்கறிஞர்கள் போராட் டத்தில் ஈடுபடவும் அகில இந்திய பார் கவுன்சில் அழைப்புவிடுத்துள்ளது.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.மோகன கிருஷ்ணன் மற்றும் பெண் வழக்கறிஞர் சங்கத் தலைவர் வி.நளினி ஆகியோர் வெளியிட் டுள்ள அறிக்கைகளில், ‘‘வழக் கறிஞர்களுக்கு எதிராக உள்ள சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி ஏப். 7-ல் ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பு நடத்தப் படும்’’ என தெரிவித்துள்ளனர்.