

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியம், தொப்பம்பட்டி ஊராட்சி ஜாதிக்கவுண்டன்பட்டி கிராமத்தில் செயல்படுத்தப்படும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் மற்றும் வீடுதோறும் தனிநபர் கழிப்பறை கட்டும் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியர் டி.ஜி.வினய் நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது காமம்மாள்(80) என்பவர், “வயதான காலத்தில் வீட்டில் இருந்து வெகுதொலைவு சென்றுவர முடியவில்லை. வீட்டின் அருகிலேயே கழிப்பிடம் அமைக்கப்பட்டது வசதியாக உள்ளது. மேலும் ஊரும் சுத்தமாக இருக்கிறது. நான் சிறுவயது முதலே திறந்தவெளிக் கழிப்பிடத்தைத் தான் பயன்படுத்தி வந்தேன். 80-வது வயதில்தான் சுகாதாரமான இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது” என்றார்.
இதைக்கேட்ட ஆட்சியர், ஜாதிக்கவுண்டன்பட்டி கிராமத்தில் 40 சதவீதம்பேர் தான் தனிநபர் கழிப்பிடம் கட்டியுள்ளனர். மக்க ளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நீங்கள்தான் சரியான நபர். மற்ற வர்களையும் கழிப்பிடம் கட்ட வைக்க நீங்கள் கிராமத்தின் சுகாதார தூதராக செயல்பட வேண்டும் என வேண்டு கோள் விடுத்தார். ஆட்சியரின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வ தாக மூதாட்டி உறுதி அளித்தார்