கோவை கல்குவாரி விபத்து; பலியான 2 பேரின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்- அமைச்சர் எம்.சி.சம்பத் உறுதி
கோவை சூலூர் கல்குவாரி விபத் தில் பலியான 2 பேரின் குடும்பத் துக்கு தமிழக அரசு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என சட்டப்பேரவையில் திமுக கொறடா அர.சக்கரபாணி கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த தொழில்துறை அமைச் சர் எம்.சி.சம்பத், பலியானவர் களின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்து திமுக கொறடா அர.சக்கர பாணி பேசும்போது, ‘‘கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கல் குவாரியில் ஏற்பட்ட விபத்தில் சக்திவேல், பாலன் ஆகியோர் உயி ரிழந்துள்ளனர். இவர்கள் இரு வரும் எனது ஒட்டன்சத்திரம் தொகு தியைச் சேர்ந்தவர்கள். இந்த இருவருக்கும் தலா 3 குழந்தைகள் உள்ளன. குடியிருக்க வீடு கூட இல்லாமல் வறுமையில் வாடும் இவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணமும், குடும்பத் தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்’’ என்றார்.
அவருக்கு பதிலளித்த தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத், ‘‘கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கல் குவாரியில் பாறாங்கற்கள் உருண்டு விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் சக்திவேல், பாலன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு மாவட்ட ஆட்சி யர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
உயிரிழப்புக்கு காரணமாக குவாரியில் கடந்த 18-ம் தேதி முதல் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பலியான இருவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என சூலூர் தொகுதி எம்எல்ஏவும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும்’’ என்றார்.
