

குரூப்-2-ஏ தேர்வுக்கான 3-வது கட்ட கலந்தாய்வு ஜூன் 21-ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
குரூப்-2-ஏ பணிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்காக 24.1.2016 அன்று எழுத்துத்தேர்வு நடைபெற்றது. தேர்வின் முடிவு அதே ஆண்டில் ஜூன் 8-ம் தேதி வெளியிடப்பட்டது. இத்தேர்வுக் கான 3-வது கட்ட கலந்தாய்வு வரும் ஜூன் 21-ம் தேதி சென்னை யில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெறும்.
இக்கலந்தாய்வுக்கு தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களின் பதிவெண் அடங்கிய பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc. gov.in) வெளியிடப்பட்டு இருக்கி றது. கலந்தாய்வு நாள், நேரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட விண் ணப்பதாரர்களுக்கு அதற்கான அழைப்பாணை விரைவு அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த அழைப்பாணையை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.