

ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோயி லில் கொள்ளையடிக்க முயன்ற வட மாநில கொள்ளையர்கள் 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பிரசித்தி பெற்ற சந்திர சூடேஸ்வரர் மலைக் கோயில் உள்ளது. இக்கோயிலில் பஞ்ச லோக, மரகத சிலைகள், தங்க தேர் உள்ளிட்ட விலை மதிப்புமிக்க பொருட்கள் உள் ளன. இந்நிலையில், கடந்த 21-ம் தேதி, நள்ளிரவு 12 மணியளவில் கோயிலின் காவலாளி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, கோயில் வளாகத்தில் புகுந்த 6 மர்ம நபர்கள், கோயிலின் இரும்பு கதவினை கடப்பாரையால் உடைக்க முயன்றனர். அவர் களை விரட்டிச் சென்ற ரங்கன் உள்ளிட்ட கோயில் ஊழியர்களி டம் 2 பேர் சிக்கினர். 4 பேர் தலைமறைவாயினர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த ஓசூர் நகர காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் போலீ ஸார் பிடிப்பட்ட 2 பேரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து தப்பியோடிய 4 பேரையும் நேற்று போலீஸார் கைது செய்தனர்.
கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நேபாளத்தை சேர்ந்த நாகேந்திர ராவ் (40), பிரேம் பகதூர் (27), சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த தீபக்சேத்ரி (28), அரு ணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த தீபக் சர்மா (19), பீபன் பகதூர், மிக்கத் சர்மா ஆகியோர் என்பது தெரியவந்தது.
மேலும், கடந்த 21-ம் தேதி காலை ஓசூருக்கு வந்த 6 பேரும், மலை கோயில் பூங்காவில் தங்கியிருந்து, கோயிலில் உள்ள சிலைகள், உண்டியல்களை நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்திற்கு முயற்சி செய்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து 6 பேரையும் கைது செய்த போலீஸார், வேறு கொள்ளை சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
உண்டியல் காணிக்கை
ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோயிலில் 6 மாதத்திற்கு ஒரு முறை உண்டியல் எண்ணப்படு வது வழக்கம். அதன்படி கடந்த தேர் திருவிழா முடிந்து சில நாட்கள் கழித்து உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.
இந்நிலையில், கடந்த 21-ம் தேதி நள்ளிரவில் நடந்த கொள்ளை முயற்சியைத் தொடர்ந்து, நேற்று இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நித்யா, கோயில் செயல்அலுவலர் ராஜரத்தினம் ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டு எண்ணப் பட்டது.
இதில், காணிக்கையாக ரூ.3 லட்சத்து 37 ஆயிரத்து 365, தேர் பேட்டை கோயிலில் ரூ.1 லட் சத்து 22 ஆயிரத்து 157 இருந்தது.