Published : 04 Jan 2016 07:54 AM
Last Updated : 04 Jan 2016 07:54 AM

தமிழக மக்களைப் பற்றி சிறிதும் அக்கறை இல்லை: முதல்வர் மீது வைகோ குற்றச்சாட்டு

மக்களைப் பற்றி சிறிதும் அக்கறையின்றி தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆட்சி நடத்துகிறார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டினார்.

திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்ட மதிமுக செயல்வீரர்கள் கூட்டம், திருச்சி மண்ணச்சநல்லூரில் நேற்று நடைபெற்றது. அதில் பங்கேற்ற வைகோ, செய்தியாளர்களிடம் கூறியது:

கொள்கை பரப்பு துணைச் செய லாளர் பதவியிலிருந்து நாஞ்சில் சம்பத் விடுவிக்கப்பட்டது அக்கட் சியின் உள்விவகாரம். எனவே, அது குறித்து நான் எந்தக் கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. முன்பு நாஞ்சில் சம்பத் என்னை நிறைய பாராட்டியுள்ளார். அதை மட்டுமே நான் நினைவில் வைத்துள்ளேன். அவர் திட்டியதை நான் பொருட்படுத்தவில்லை.

மக்களைப் பற்றி சிறிதும் அக் கறையின்றி ஆட்சி நடத்துகிறார் ஜெயலலிதா. சென்னையில் பல மணி நேரம் போக்குவரத்து நெரி சலை ஏற்படுத்தி, மக்களைக் காத் திருக்க வைத்து ஆடம்பரமாக அதிமுக பொதுக்குழுவை நடத்தி யதே இதற்கு சரியான உதாரணம்.

அந்தக் கூட்டத்துக்கு வந்தவர் களை உள்ளே அனுமதிப்பது, ஒழுங்குபடுத்துவது உள்ளிட்ட பணிகளில் தமிழக அரசின் மக்கள் தொடர்புத் துறை அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்ற விஷயங்களால்தான் அதிமுக ஆட்சியை இழக்கப்போகிறது.

வழக்குகள், தண்டனைகளில் இருந்து ஜெயலலிதா எந்தப் பாடத்தையும் கற்றுக்கொள்ள வில்லை. அதனால்தான், சசிகலா தரப்பினர் ரூ.1,000 கோடிக்கு 11 திரையரங்கம் கொண்ட வளாகத்தை வாங்கியுள்ளனர். இதுபோன்ற போக்கு மக்களிடம் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கமாக, ஆளுங்கட்சி மீது வெறுப்பு ஏற்பட்டால், எதிர்க் கட்சிக்கு மக்கள் ஆதரவளிப்பர். ஆனால், இம்முறை திமுகவுக்கு மக்களிடம் ஆதரவில்லை. 2011-ல் திமுக அரசின் மீது இருந்த வெறுப்பு, இப்போதும் நீடிக்கிறது. அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளையும் மக்கள் வெறுப்ப தால்தான், மக்கள் நலக் கூட்ட ணியை விரும்புகின்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒப்பற்றத் தலைவரான ஏ.பி.பரத னின் மறைவு இந்திய அரசிய லுக்கு, பொது வாழ்வுக்கு, ஜன நாயகத்துக்கு, பொதுவுடமை இயக்கத்துக்கு ஈடுசெய்ய முடி யாத இழப்பு. தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமாகா தலைவர் வாசன் கண்டிப்பாக மக்கள் நலக் கூட்டணியில் பங்கேற்பர் என்று நம்புகிறோம் என்றார் வைகோ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x