

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் வேதனை தெரிவித்தார்.
பழநியில் நேற்று இல.கணேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கொலை கள் நடக்க மதுதான் காரணமாக உள்ளது. மது விலக்கை படிப்படியாக என்பதை விரைவு படுத்த வேண்டும்.
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. சென்னையில் தொடர்ந்து கொலைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. கொலைகளுக்குக் காரணமாக மது இருப்பது நாளிதழ் செய்திகளில் இருந்து தெரியவருகிறது.
விரைவுபடுத்த வேண்டும்
எனவே, படிப்படியாக மதுபானக் கடைகளை குறைப் பதை விரைவுபடுத்த வேண்டும். கச்சத்தீவை மீட்கும் விஷயத்தில், மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதுவரை கச்சத்தீவில் தமிழக மீனவர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படும்.
காங்கிரஸில் கோஷ்டி பூசல்
காங்கிரஸ் கட்சியில் என்றுமே ஜனநாயகம் இருந்ததில்லை. அவர்களுக்கு ஜனநாயகம் மீது நம்பிக்கையும் இல்லை. தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் இளங்கோவன் ராஜினாமா என்பது, அவர்களது உள்கட்சி விவகாரம். ஆனால், யார் தலைவராக வந்தாலும் காங்கிரஸில் கோஷ்டிப் பூசலுக்கு பஞ்சம் இருக்காது என்றார்.