

மதுக்கடைகளை அகற்ற முதலில் உரியவர்களிடம் மனு கொடுங்கள். நடவடிக்கை எடுக்காவிட்டால் என்னிடம் வாருங்கள் என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மக்களிடம் தெரிவித்தார்.
திருக்கனூர் அருகே சோரப் பட்டில் உள்ள உதவும் கரங்கள் ஆண்கள் சுயஉதவிக் குழுவின ரின் கோரிக்கையை ஏற்று நேற்று துணை நிலை ஆளுநர் கிரண்பேடி சோரப்பட்டு கிராமத்துக்குச் சென்றார்.
அப்போது மக்கள் சோரப்பட் டில் மாநில நெடுஞ்சாலையில் கள் மற்றும் சாராயக்கடையும், மதுக்கடையும் அகற்றப்படாமல் இருப்பதாகவும், அவற்றை அகற்ற உத்தரவிடும்படியும் கேட் டுக் கொண்டனர். இதற்கு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் இரு சாராயக்கடைகளும் உச்சநீதி மன்றத்தின் உத்தரவுக்கு உட் பட்ட பகுதியில் வரவில்லை என்று தெரிவித்தனர். உடனே ஆளுநர், மக்கள் எதிர்ப்பதால் அந்தக் கடைகளை அகற்றலாமே என்று கேட்டபோது, அது கலால் துறையின் பணி என்று கூறினார்.
இதையடுத்து பொதுமக்களிடம் சாராயம் மற்றும் மதுக்கடைகளை அகற்ற முறைப்படி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மற்றும் கலால்துறை துணை ஆணையரி டம் புகார் மனு கொடுங்கள். அதன்பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் என்னிடம் வாருங்கள் என்று கூறினார்.