உடுமலை சங்கர் கொலை வழக்கில் அரசுத் தரப்பில் 8 பேர் சாட்சியம்

உடுமலை சங்கர் கொலை வழக்கில் அரசுத் தரப்பில் 8 பேர் சாட்சியம்
Updated on
1 min read

திருப்பூர் மாவட்டம் உடுமலை, குமரலிங்கத்தைச் சேர்ந்தவர் சங்கர்(22). கவுசல்யா என்ற பெண்ணை காதலித்து, கலப்புத் திருமணம் செய்துகொண்டார். இதனால், கடந்த மார்ச் 13-ம் தேதி, உடுமலையில் சங்கர் கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக, கவுசல்யா வின் தந்தை சின்னசாமி, தாயார் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை உட்பட 11 பேரை உடுமலை போலீஸார் கைது செய்தனர். இவ்வழக்கு திருப்பூர் வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி அலமேலு நடராஜன் முன்னிலை யில் நேற்று விசாரிக்கப்பட்டது. அப்போது, கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அரசுத் தரப்பு சாட்சிகளான கருணாநிதி, ரெங்கநாதன், கார்த்திக், ஆறுமுகம், துரைசாமி, மகேந்திரன், வெங்கடேஷ் மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகிய 8 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகி நேற்று சாட்சியம் அளித்தனர். நீதிபதி அலமேலு நடராஜன், அவர்களி டம் விசாரித்தார். பின்னர் வழக் கின் விசாரணையை வரும் 28-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in