

தமிழக அரசு மருத்துவமனைக ளில் 2,176 உதவி டாக்டர்கள் நியமனத்துக்கான போட்டித் தேர்வு சென்னையில் 3 மையங் களில் நேற்று நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 2,142 உதவி டாக்டர்கள், 34 உதவி பல் டாக்டர்கள் என 2,176 உதவி டாக்டர்கள் போட்டித் தேர்வு மூலமாக நியமிக்கப்படுவார்கள் என அரசு அறிவித்து இருந்தது. இதையடுத்து மருத்துவ பணியா ளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) தேர்வுக்கான அறிவிப்பை வெளி யிட்டது.
தமிழகம் முழுவதும் இருந்து 6,286 பேர் விண்ணப்பித்து இருந்தனர். திட்டமிட்டபடி கடந்த மாதம் 28-ம் தேதி நடக்க இருந்த தேர்வு, நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அக்டோபர் 12-ம் தேதி தேர்வு நடக்கும் என 3 நாட்களுக்கு முன்பு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்தது.
அதன்படி சென்னை அமைந்தகரை பச்சையப்பன் கல்லூரி, அண்ணா நகர் அண்ணா ஆதர்ஷ் கல்லூரி, முகப்பேர் வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய 3 இடங்களில் உதவி டாக்டர்களுக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. காலை 10 மணி முதல் பகல் 12.30 மணி வரை நடந்த தேர்வை 90 சதவீதம் டாக்டர்கள் எழுதியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.