

புதுச்சேரி புதிய துணைநிலை ஆளுநராக கிரண்பேடி கடந்த ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். புதிய பொறுப்புக்கு வந்தது முதல் அவர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக பொதுமக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்க ஏதுவாக 1031 என்ற இலவச தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிவித்திருக்கிறார்.
அதோடு, அனைத்து அரசுத் துறைகளை சேர்ந்த அதிகாரிகள் நாள்தோறும் மாலை 5 மணி முதல் 6 மணிவரை கட்டாயமாக தங்களுடைய அலுவலகங் களில் இருக்க வேண்டும். அந்த நேரம் முழுவதும் துறை சார்ந்து பொதுமக்கள் அளிக்கும் புகார்கள், குறைகளை கேட்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
அதே போல தன்னையும் ராஜ் நிவாசில் மாலை 5 முதல் 6 மணி வரை பொதுமக்கள் எளிதாக சந்தித்து புகார்கள், குறைகளை கூறலாம் எனத் தெரிவித் திருந்தார்.
இந்நிலையில் நேற்று முதல் நாளிலேயே எந்த ஒரு முன் அனுமதியும் இல்லாமல் துணைநிலை ஆளுநரை மக்கள் சந்தித்தது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.