

தமிழக சட்டப்பேரவையில் ஜனநாய கம் புத்துயிர் பெற வழியேதும் உண்டா? என்று திமுக தலை வர் கருணாநிதி கேள்வி எழுப்பி யுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்றி முடித்ததும் பேரவைத் தலைவர் அறையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில்தான் பேர வையை எத்தனை நாள் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு விஷ யங்கள் பேசப்படும். திமுக ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்திலும் நான் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால், இன்றைய முதல்வர் ஜெய லலிதா இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதாக தெரியவில்லை.
சில முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக அமைச்சர்கள், முதல்வரின் அறைக்குச் சென்று அவரின் கருத்தை அறிந்து வருவர். அதுவரை அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் உள்ளவர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள். அதிமுக ஆட்சியில் ஜனநாயகம் எப்படி பாதுகாக்கப்படுகிறது என்பதற்கு இதுவே சான்றாகும்.
ஆளுநர் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பேசும் நாளிலேயே முதல்வர் பதிலளிப்பதுதான் இது வரை மரபாக இருந்தது. ஆனால், தற்போது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை முதல் நாளே பேசச் சொல்லிவிட்டு, முதல்வர் நேற்று பதிலளித்துள்ளார். இது வரை சட்டப்பேரவை பின்பற்றாத புதிய ஏற்பாடு. இதுதான் அதிமுக ஆட்சியில் ஜனநாயக மரபுகளை பாதுகாக்கும் லட்சணம்.
சட்டப்பேரவையில் 89 உறுப் பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக இருந்தாலும் எதிரி கட்சியாக நடந்துகொள்ள மாட் டோம் என மு.க.ஸ்டாலின் அறிவித்தார். சட்டப்பேரவையில் நான் அமர்வதற்கு இருக்கை வசதி செய்துதர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். ஆனால், 2-வது வரிசையில் சக்கர நாற்காலி போக முடியாத இடத்தில் இடம் ஒதுக்கியுள்ளனர். 89 எம்எல்ஏக்கள் இருப்பதால் திமுக சார்பில் தினமும் 3 பேரை பேச அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கப்படவில்லை. அதிமுகவின் இறுக்கமான ஒருவழிப்பாதை ஜன நாயகத்துக்கு இதுவே உதாரணம்.
ஆளுநர் உரை மீதான விவாதத்துக்கு பதிலளிக்கும் முதல்வர், அனைத்து உறுப்பினர் களின் பேச்சையும் பேரவையில் அமர்ந்து கவனிக்க வேண்டும். குறிப்பெடுத்துக் கொள்ள வேண் டும். எதிர்க்கட்சியினர் பேசும்போது அவர்களுக்கு பதிலளிக்க வேண்டும்.
ஆனால், ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது முதல்வர் ஜெயலலிதா ஒரேயொரு நாள் மட்டுமே அதுவும் சில மணி நேரமே பேரவையில் இருந்தார். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசும்போதும் முதல்வர் இல்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்களை எந்த அளவுக்கு மதிக்கிறார் என்பது இதன்மூலம் தெளிவாகிறது.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒரு கருத்தை சொல்ல முயன்றால் உடனே ஏதோ ஒரு அமைச்சர் குறுக்கிடுகிறார். உடனே, நேரம் முடிந்து விட்டதாகக் கூறி பேரவைத் தலைவர் உட்கார வைப்பது கொடுமையிலும் கொடுமையாகும். ஏராளமான குறுக்கீடுகள் இருந்தாலும் சிறிதும் குலைந்துவிடாமல் தமிழ கத்தின் பிரச்சினைகளை ஸ்டாலின் எடுத்துரைத்தார். கன் டெய்னர் லாரிகளில் ரூ.570 கோடி பிடிப்பட்டது பற்றி பேசத் தொடங்கியதும் அதை அவைக் குறிப்பிலிருந்து நீக்கிவிட்டனர்.
ஆளுங்கட்சியினர் பக்கம் நேர்மை இருந்தால் விளக்கம் அளிக்க வேண்டியதுதானே? எதற் காக ஜனநாயக ரீதியான அணுகு முறையைக் கண்டு ஓட்டம் பிடிக்கி றார்கள். ஜனநாயகத்துக்கு புறம் பான இதுபோன்ற காட்சிகள்தான் இங்கே தொடர்ந்து அரங்கேறுமா? ஜனநாயகம் புத்துயிர் பெற வழியேதும் உண்டா? இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.