Last Updated : 02 Jun, 2016 11:34 AM

 

Published : 02 Jun 2016 11:34 AM
Last Updated : 02 Jun 2016 11:34 AM

மதுக்கடைகளை மூடும் பணிகளில் வேகம்?- கடைகளின் பட்டியலைத் தொடர்ந்து ஊழியர் பட்டியல் தயார்

தமிழகத்தில் அதிமுக அரசு பொறுப்பேற்றவுடன், படிப்படியாக டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் எனவும், முதல் கட்டமாக நேரக்குறைப்பு மற்றும் 500 கடைகளை மூடுவது என அறிவித்தது. அதன்படி மதுக்கடைகளின் நேரம் குறைக்கப்பட்டு, 500 கடைகளை மூடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதில், மாவட்ட வாரியாக பொதுமக்கள் ஆட்சேபனை உள்ள கடைகள், மதுக்கூடங்கள் செயல்படாத மதுக்கடைகள், வழிபாட்டுத்தலத்துக்கு அருகாமையில் உள்ளவை, பள்ளிக்கூ டங்களுக்கு அருகே அமைந்துள்ளவை, விற்பனை ரூ.50 ஆயிரத்துக்கும் குறைவாக இருப்பவை, அருகருகே 50 மீட்டருக்குள் அமைந்திருப்பவை ஆகியவற்றின் அடிப்படையில் மதுக்கடைகளின் விவரம் கணக் கெடுக்கப்பட்டுள்ளது. அதில் டாஸ்மாக் நிர்வாக அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் வாரியாக மூடுவதற்கு ஏதுவான கடைகள் குறித்த விவரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த விவரங்கள் அனைத்தும் அந்தந்த டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள் மூலம் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநருக்கு அனுப்பப்பட்டுள்ளன. தலைமையிடத்தில் இறுதி ஆலோசனை நடத்தி, அதன் பேரில் மூடப்படும் கடைகள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

அந்த வகையில், கோவை மாவட்டத்தில் டாஸ்மாக் நிர்வாகத்தின் அடிப்படையில் கோவை வடக்கு, தெற்கு என இரு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக சுமார் 307 கடைகள் உள்ளன. இதில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் கடைகள், பிரச்சினைக்குரிய கடைகள் என வடக்கு மாவட்டத்தில் இருகூர், கோயில்மேடு, டி.கே.மார்க்கெட், தடாகம், நரசிம்மநாயக்கன்பாளையம், அன்னூர், பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம், காந்திபுரம், மூன்றுகம்பம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் 13 கடைகளை இந்த பட்டியலில் பரிந்துரைத்துள்ளதாகவும், தெற்கு மாவட்டத்தில் 11 கடைகள் பரிந்து ரைக்கப்பட்டுள்ளதாகவும் டாஸ்மாக் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். விரைவில் கடைகளை மூடுவதற்கான அறிவிப்பு வரும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

வேலை இழப்பு

ஒவ்வொரு மதுக்கடையிலும் மேற்பார்வையாளர், உதவியாளர் என சராசரியாக 5 பேர் வரை பணியில் உள்ளனர். கடைகள் மூடப்படுவதால் இந்த ஏராளமான டாஸ்மாக் ஊழியர்களுக்கு வேலையிழப்பு ஏற்படும் என்ற கருத்தும் நிலவி வருகிறது. அனைத்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள் அலுவலகத்திலும் டாஸ்மாக் ஊழியர்கள் குறித்த விவரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. பதவி மூப்பு, பணி மூப்பு அடிப்படையில் பட்டியல் தயாரித்து ஒட்டப்பட்டிருப்பதாகவும், அதில் திருந்தங்கள் இருந்தால் தெரிவிக்க ண்டுமென உத்தரவிடப் பட்டுள்ளதாகவும் டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். மூடப்படும் கடைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஊழியர்கள் எண்ணிக்கை குறைப் பதற்காகவே இந்த பட்டியல் தயாரிக்கப் படுவதாகவும், இதனால் ஏராளமானோர் வேலையிழக்க வாய்ப்புள்ளதாகவும் ஊழியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தொழிற்சங்கத்தினர் கூறும்போது, ‘கடைகளை மூடுவது வரவேற்கத்தக்கது. அதேசமயம் டாஸ்மாக் நிர்வாகத்தில் பணியாற்றுவோருக்கு மாற்றுப்பணியை அரசு உறுதிப்படுத்த வேண்டும். அடுத்தடுத்து 2 நிதியாண்டில் 480 நாள் வேலை செய்தாலே பணி நிரந்தரம் என்ற சட்டம் இங்கு கடைபிடிக்கப்படவில்லை. 2003-ல் பணியில் சேர்ந்து 14 வருட பணி அனுபவத்தில் இருந்தும் தொகுப்பூதிய ஊழியர்களாகவே இருக்கிறோம். எங்களால் போட்டித் தேர்வுகளில் இனி பங்கேற்க முடியாது. தமிழகத்தில் அடுத்தடுத்து அரசுகளின் அரசியல் வளர்ச்சிக்கு டாஸ்மாக் நிர்வாகமும், ஊழியர்களுமே காரணமாக இருந்தனர். எனவே காலியாக உள்ள 3.5 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப எங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x