உதவித்தொகை கிடைக்காமல் எஸ்.சி., எஸ்.டி. ஆய்வு மாணவர்கள் அவதி

உதவித்தொகை கிடைக்காமல் எஸ்.சி., எஸ்.டி. ஆய்வு மாணவர்கள் அவதி
Updated on
1 min read

தமிழக அரசு அறிவித்த ரூ.50,000 உதவித்தொகை கிடைக்காமல் எஸ்.சி., எஸ்.டி. ஆராய்ச்சி மாணவர்கள் அவதிப்படுகிறார்கள்.

எஸ்சி., எஸ்.டி. மாணவர்கள் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடு வதை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட் டத்தை தமிழக அரசு அறி வித்தது. திட்டத்தின் கீழ் ஆண்டு தோறும் 700 பேருக்கு உதவித் தொகை வழங்க முடிவு செய்யப் பட்டது.

4 ஆண்டுகளுக்கு கிடைக்கும்

கலை, அறிவியல், பொறி யியல், தொழில்நுட்பம் உள் ளிட்ட பிரிவுகளில் இதற்காக பலர் தேர்வுசெய்யப்பட்டனர். தேர்வுசெய்யப்படுவோருக்கு முதல் ஆண்டு உதவித்தொகை வழங்கிய பிறகு அடுத்தடுத்து 4 ஆண்டுகளில் அவர்களின் வழிகாட்டி மற்றும் துறைத் தலைவர் அளிக்கும் முன்னேற்ற அறிக்கையின் பேரில் உதவித்தொகை நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கான விண்ணப்பப் படி வங்கள் ஒவ்வொரு மாவட்டத்தி லும் மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரி அலுவல கங்களில் 2 மாதங்களுக்கு முன்பு வழங்கப்பட்டன.

700 பேருக்கு ரூ.3.5 கோடி

மேலும், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கும் மாதிரி விண்ணப்ப படிவங்கள் அனுப் பப்பட்டன.

இந்த புதிய திட்டத்துக்கு ஒரு மாணவருக்கு ரூ.50 ஆயிரம் வீதம் 700 பேருக்கு ரூ.3.5 கோடியை தமிழக அரசு உடனடியாக ஒதுக்கியது. இந்த திட்டத்தின்கீழ் ஆராய்ச்சி உதவித்தொகை பெறு வதற்கு தமிழக முழுவதும் 700-கும் மேற்பட்ட ஆதி திராவிடர், பழங்குடியின மாணவர்கள் விண்ணப்பித்தனர். 2013-14-ம் கல்வி ஆண்டில் செயல்படுத்த உத்தேசிக்கப் பட்ட இந்த திட்டத்தில் இதுவரை எந்த மாணவருக்கும் ஆராய்ச்சி படிப்புக்கான உதவித்தொகை வழங்கப்படவில்லை என்று ஆய்வு மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in