மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை

மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை
Updated on
1 min read

காற்று மண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஹுத் ஹுத் புயலைத் தொடர்ந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வந்தது. புதன்கிழமை காலை 8.30 மணி வரை பதிவான மழை நிலவரப்படி திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் 8 செ.மீ., ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், திருப்பூர் மாவட்டம் காங்கேயம், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ., திருநெல்வேலி மாவட்டம் ஆய்க்குடியில் 6 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, குளச்சல், கோவை மாவட்டம் மேட்டுப் பாளையம், புதுக்கோட்டை மாவட்டம் இழுப்பூர், நீலகிரி மாவட்டம் குன்னூர் ஆகிய இடங்களில் 5 செ.மீ., ஈரோடு மாவட்டம் பவானிசாகர், திருநெல்வேலி மாவட்டம் தென்காசி உள்ளிட்ட இடங்களில் 4 செ.மீ. மழை பெய்துள்ளது. மேலும் திண்டுக்கல், அரியலூர், தூத்துக்குடி, புதுச்சேரி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது.

மேலும் அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. புயலின் தாக்கம் முழுமையாக குறைந்து, தென் மேற்கு பருவ மழை முடிந்த பிறகே, வட கிழக்கு பருவ மழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் தென் மேற்கு பருவ மழை அடுத்த 4 நாட்களில் முடியும். அதை தொடர்ந்து தமிழகத்திலும் தென் மேற்கு பருவ மழை முடியும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in