

காவிரிப் பிரச்சினை பெரிய அளவில் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக சட்டப்பேரவையில் சுமுகமான நிலையை ஏற்படுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா முன்வர வேண்டும் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியது: தமிழகத்தில் காவிரிப் பிரச்சினை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து, காவிரி நீரைப் பெற போராட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில், தமிழக சட்டப் பேரவைத் தலைவருக்கும், எதிர்க் கட்சி எம்எல்ஏ-க்களுக்குமிடையே ஏற்பட்டுள்ள பிரச்சினையை சாதக மாகப் பயன்படுத்திக் கொண்டு, காவிரியில் தண்ணீர் விடமாட்டோம் என்று கர்நாடக முதல்வரும், அம் மாநில அமைச்சர்களும், மத்திய அமைச்சர்கள் சிலரும் தெரிவிக் கின்றனர். காவிரிப் பிரச்சினை தமிழக விவசாயிகளிடையே மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி யுள்ளது. இப்பிரச்சினை தொடர்பாக வரும் 30-ம் தேதி தமிழகம் முழுவ தும் முழுஅடைப்புப் போராட்டம் நடத்தவுள்ளோம்.
எனவே, அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து காவிரி நீருக்காக போராட வேண்டும். தமிழக சட்டப்பேரவையில் ஏற்பட் டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு, சுமுக நிலையை உருவாக்கி, காவிரி பிரச்சினை தொடர்பாக ஒத்தகருத்தோடு தீர்மானங்களை நிறைவேற்ற முதல்வர் முன்வர வேண்டும். மேலும், பிரதமரை நேரில் சந்தித்து, நெருக்கடி கொடுத்து, காவிரியில் தண்ணீரைப் பெற முயற்சிக்க வேண்டும் என்றார்.