

கர்நாடக முதல்வர் சித்தராமையா வின் மகன் ராகேஷ் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள் ளனர்.
இது தொடர்பாக சித்தராமை யாவுக்கு கருணாநிதி அனுப்பி யுள்ள இரங்கல் கடிதத்தில், ‘உங்கள் மகனின் அகால மரணச் செய்தியை கேள்விப்பட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். இத்தகைய சோகமான துக்க தருணத்தில் உங்களையும், உங்கள் மனைவி மற்றும் குடும்பத்தாரையும் ஆற்றுப் படுத்துவதற்கு போதுமான வார்த் தைகள் என்னிடம் இல்லை. உங்கள் மகனின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட இரங்கல் அறிக்கை யில், ‘கர்நாடகா முதல்வர் சித்தரா மையாவின் மகன் ராகேஷ் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். ராகேஷை இழந்து வாடும் சித்தராமையாவுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்’ என்று கூறியுள்ளார்.