

ஆயுதபூஜை மற்றும் பக்ரீத் விடுமுறை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வரத்து கன்னியாகுமரியில் அதிகரித்துள்ளது.
நேற்று முன் தினம் இரவு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் கார்களிலும், வேன்களிலும் பஸ்களிலும் வந்த வண்ணம் இருந்தனர். இதனால் கன்னியாகுமரி நகர் முழுவதும் வாகனங்களால் நிறைந்து காணப்பட்டன.
கன்னியாகுமரியின் முக்கிய சுற்றுலாத்தலமான விவே கானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகியவற்றைப் பார்வை யிடுவதற்காக படகு டிக்கெட் வாங்க நீண்ட வரிசையில் சுற்றுலாப் பயணிகள் காத்தி ருந்தனர்.
கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் நேற்று சிறப்புக் கட்டணம் செலுத்தி, படகு டிக்கெட் வாங்கும் வசதி ரத்து செய்யப்பட்டது. இதனால் அனைத்து சுற்றுலாப் பயணிகளும் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக படகு டிக்கெட் வாங்க வரிசையில் காத்து நின்றனர்.
சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தை சமாளிக்கவும், சுற்று லாப் பயணிகளுக்கு பாதுகாப்பு கொடுக்கவும் அப்பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப் பட்டிருந்தனர்.