

சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையிலும், தி.நகரில் குடை பிடித்தபடி மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
தீபாவளிக்கு முந்தைய கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று தி.நகரில் மக்கள் கூட்டம் அலைமோதி யது. ரங்க நாதன் தெரு, உஸ்மான் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டதால், தி.நகர் பகுதியே திணறியது. தொடர் மழையிலும் மக்கள் தீபாவளிப் பொருட்களை வாங்க ஆர்வம் காட்டினர்.
மழை தொடர்ந்து பெய்து கொண்டு இருந்தாலும், மக்கள் குடை பிடித்தபடி வந்து கொண்டே இருந்தனர். கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் தி.நகரில் சாலைகள் அனைத்தும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கின்றன. சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர் களை பிடிக்க, கோபுரத்தின் மீது நின்றும், மாறு வேடங்களிலும் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக தி.நகர் வந்த பொதுமக்கள் கூறியதாவது:
தி.நகரில் பண்டிகைக் காலங்களில் லட்சக்கணக்கான மக்கள் வருகிறார் கள். ஒவ்வொரு ஆண்டும் இதே நிலைதான் இருக்கிறது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த எவ்விதமான நடவடிக்கைகளையும் அரசு எடுக்க வில்லை. நடந்து செல்லும் சாலையே சிறியதாக இருக்கிறது. அதிலும் இரு புறங்களிலும் கடைகளை வைத்துள் ளனர். எப்படி நடந்து செல்வது என தெரியவில்லை. ஒருவர் மீது ஒருவர் இடித்துக் கொண்டே செல்ல வேண்டி யுள்ளது. இவற்றை எல்லாம், போலீஸார் கண்டுகொள்வதில்லை. இனிவரும் பண்டிகைக் காலங்ளிலாவது தி.நகரில் பகுதியில் கூட்ட நெரிசலை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.