Published : 03 Jun 2017 03:44 PM
Last Updated : 03 Jun 2017 03:44 PM

ஜிஎஸ்டி வரி விதிப்பில் 18 பொருட்கள் மீதான வரியில் திருத்தங்கள் முன்மொழிவு: அமைச்சர் ஜெயக்குமார்

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பில் தமிழக மக்களின் நலன் கருதி 18 வகையான பொருட்கள் மீது திருத்தங்களை இன்றைய ஜிஎஸ்டி கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் முன் மொழிந்தார். அமைச்சர் முன்மொழிந்துள்ள திருத்தங்கள்...

(1) அரிசி, கோதுமை, பார்லி போன்ற தானியங்களுக்கு வரிவிலக்கு அளிக்க கருதப்பட்டுள்ளது. ஆனால், அப்பொருட்கள் தனியாக அடைக்கப்பட்டு மற்றும் பதிவு பெற்ற வணிகச் சின்னம் கொண்டிருந்தால் அவை ரூ.5 வரி வகையில் கொண்டு வரப்பட இருக்கிறது. வணிகச் சின்னம் இடப்பட்ட அல்லது இடப்படாத அனைத்து உணவுப் பொருட்களுக்கும் வரியிலிருந்து விலக்களித்திட வேண்டும். ஆட்டா, மைதா, கடலைமாவு மற்றும் பிற மாவுகளுக்கும் இதே போன்று வரி விலக்கு அளித்திட வேண்டும்.

(2) சமூகத்தின் அடித்தட்டில் உள்ளவர்களால் அத்தியாவசியமாக பயன்படுத்தக்கூடிய திரும்ப நிரப்பக்கூடிய கேன்கள் (பபுல் டாப்) மற்றும் சிறிய பிளாஸ்டிக் உறைகளில்

விற்கப்படும் தண்ணீரானது பாட்டில்களில் விற்கப்படும் தண்ணீரிலிருந்து வேறுபடுத்தப்பட வேண்டும். ஆகையால், திரும்ப நிரப்பக்கூடிய கேன்கள் (பபுல் டாப்) மற்றும் சிறிய பிளாஸ்டிக் உறைகளில் விற்கப்படும் தண்ணீரானது விலக்களிக்கப்பட வேண்டும் அல்லது ரூ.5 குறைந்த வீதத்தில் வரி விதித்திட வேண்டும்.

(3) கருப்பட்டி மற்றும் பனங்கற்கண்டு பாரம்பரிய குடிசைத் தொழிலாகும். குடிசைத் தொழிலில் ஈடுபட்டுள்ள கிராமப்புற மக்களுக்கு இவை வருவாய்க்கான ஆதாரமாகும். இவை எந்த அட்டவணையிலும் குறிப்பிடப்படாததால் ரூ.18 வரிக்கு உட்படுத்த நேரிடலாம். ஆகையால், கருப்பட்டியினை அத்தியாயம் 17-ல் இனம் 1-ல் குறிப்பிடப்பட்டுள்ள கரும்பு வெல்லத்திற்கு இணையாக அந்த அட்டவணையில் குறிப்பிட வேண்டும்

(4) அத்தியாயம் 9-ல் இனம் 10-ல் குறிப்பிடப்பட்டுள்ள கறி மற்றும் இதர நறுமணப் பொருட்கள் ரூ.5 வரிக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. மசாலா பவுடர் என இது வழக்கில் குறிப்பிடப்படுகிறது. சம்பந்தப்பட்ட பதிவினை இவ்வாறு விரிவுபடுத்த வேண்டும் என நாங்கள் கேட்டுக் கொள்கிறோம் " curry and other spices, masalas using mixture of spices of all forms and in all varieties".

அத்தியாயம் 21-ல் குறிப்பிடப்பட்டுள்ள மசாலா பொருட்கள் 28ரூ வரிக்கு உட்படுத்தப்படுவதால், இந்த இரண்டிற்கும் இடையே ஏற்படக்கூடிய வேறுபாட்டினை இது களையும். மசாலா பொருட்களுக்கும் மசாலா கலவைகளுக்கும் வேறுபாடு உள்ளது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

(5) சர்க்கரையை இடுபொருளாகக் கொண்ட சின்னமிடப்படாத சர்க்கரை மிட்டாய்கள் தயாரிப்பானது ஒரு குடிசைத் தொழிலாகும். சர்க்கரைக்கு 5ரூ வரி விதிக்கப்படுவதால் சின்னமிடப்படாத சர்க்கரை மிட்டாய்களுக்கும் 18ரூ-க்குபதிலாக 5.ரூ வரி விதிக்கப்பட வேண்டும்.

(6) கடற்கரையோரப் பகுதிகளில் மீனவத் தொழிலுக்கு துணையாக சிப்பிகளை சேகரித்து, அவை கொண்டு பொருட்களையும் கைவினைப் பொருட்களையும் தயாரிப்பதில் மீனவ சமூகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். ஆகையால், சிப்பிகள் மற்றும் அவை கொண்டு செய்யப்படும் பொருட்களுக்கும் கைவினைப் பொருட்களுக்கும் வரியிலிருந்து விலக்களித்திட வேண்டும்.

(7) இந்திய சமையலில் ஊறுகாயானது ஒரு அத்தியாவசிய பண்டமாகும். வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ள காய்கறிகள் மற்றும் செடிகளின் உண்ணக்கூடிய பகுதிகள் தான் இதற்கு முக்கிய இடுபொருள்களாகும்.

இதர இடுபொருட்களான மசாலா, எண்ணெய் போன்றவற்றுக்கு 5ரூ வரி விதிக்கப்படுகிறது. ஆகையால், ஊறுகாய்க்கும் ரூ.18-க்கு பதிலாக ரூ.5 வரி விதிக்கப்பட வேண்டும்.

(8) 1000 வோல்டுக்கு மிகாத மின் பொருட்களுக்கு தற்போது ரூ.28 வரி விதிக்கப்பட கருதப்பட்டுள்ளது. 1000 வோல்டுக்கு மிகும் மின் பொருட்களுக்கு 18ரூ வரி விதிக்கப்பட கருதப்பட்டுள்ளது. விவசாயம் மற்றும் வீட்டு வசதி பொருட்டு கொள்திறன் அளவின்றி மின் பொருட்கள் அனைத்திற்கும் ரூ.18 வரி விதித்திடவேண்டும்

(9) அத்தியாயம் 7-ல் இனம் 11-ல் வறுகடலையானது குறிப்பிடப்படவில்லை. ஆகையால், அதனையும் சேர்த்திட வேண்டும்.

(10) பார்வையற்றோரின் நலனைக் கருதி, மூக்குக் கண்ணாடிகள் மற்றும் அவற்றின் பாகங்களுக்கு ரூ.18-க்கு பதிலாக ரூ.5 வரி விதிக்கப்பட வேண்டும்.

(11) டிராக்டர்களின் பாகங்களுக்கு (ழளுசூ 8708) ரூ.28-ம் மற்றும் டிராக்டர்களுக்கு ரூ.12-ம் வரி விதிக்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே, டிராக்டர்களின் பாகங்களுக்கும் ரூ.12 வரி விதித்திட வேண்டும்.

(12) 350சிசி என்ஜின் கொள்திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் மீது மேல்வரி விதித்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. 500 சிசி என்ஜின் கொள்திறனுக்கு மேல் உள்ள மோட்டார் சைக்கிள்கள் மட்டும் ஆடம்பர பொருட்களாக கருதப்படும் என்பதால் அவற்றுக்கு மட்டும் மேல்வரி விதித்திட வேண்டும்.

(13) கான்கிரீட் பிளாக்குகள்/கான்கிரீட் செங்கற்கள் மணல், ஜல்லி மற்றும் சிமெண்ட் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த மொத்த உள்ளீடுகளில் சிமெண்ட் (ரூ.28 வரி 4 வீதத்தில்) ரூ.15 மட்டுமே ஆகும். பிற உள்ளீடுகள் அனைத்தும் 5ரூ வரிக்கு உட்படும். ஆகையால், கட்டுமானத் தொழிலுக்கு பயனளிக்கும் விதத்தில்

கான்கிரீட் பிளாக்குகள்/கான்கிரீட் செங்கற்கள் ஆகியவற்றுக்கு ரூ.28-க்கு பதிலாக குறைந்த வீதத்தில் வரி விதித்திட வேண்டும். இதே போன்று நிலக்கரி சாம்பல் கொண்டு தயாரிக்கப்படும் செங்கற்கள் மீதான வரியானது 5ரூ-ஆக குறைக்கப்பட வேண்டும்.

(14) கோயம்புத்துhரில் தயாரிக்கப்படும் வெட் கிரைண்டரானது புவியியல் அங்கீகாரம்பெற்ற ஒரு பொருளாகும். இதற்கு ரூ.28 வரி விதிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. 98ரூ-க்கு மேலான இந்த தொழிலானது குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் கீழ் உள்ளதால், இவை மத்திய கலால் தீர்வைக்கு உட்படுவதில்லை.

இத்தொழிலுக்கான பெரும்பாலான உள்ளீடுகள் ரூ.18 வரிக்கு உட்படுவதால், வெட் கிரைண்டர் மீதான வரியினையும் ரூ.18-ஆக குறைக்கப்பட வேண்டும். இதே காரணங்களுக்காக, காற்றழுத்திகள் மற்றும் எடையிடுவதற்கான கருவிகளுக்கு ரூ.28-க்கு பதிலாக ரூ.18 வரி விதிக்கப்பட வேண்டும்.

(15) தண்ணீர் எடுப்பதற்கு வடிவமைக்கப்பட்ட மின் சக்தியில் இயங்கக்கூடிய பம்புகள் பெரும்பாலும் விவசாயம் மற்றும் வீட்டுப்பயன்பாடுகளுக்கு உபயோகப்படுத்தப்பட்டு வருவதால், அவற்றுக்கு ரூ.12-க்கு பதிலாக ரூ.5 வரி விதிக்கப்பட வேண்டும்.

(16) குளிர்சாதன வசதியில்லாத உணவகங்களில் விநியோகிக்கப்படும் உணவு மற்றும் பானங்கள் மீது ரூ.12 வரி விதிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதனால் "அம்மா உணவகங்கள்" உட்பட சாமானிய மக்களுக்கும் உயர் வரி வீதத்தினால் பாதிப்பு ஏற்படக்கூடும். இது ரூ.5-ஆக குறைக்கப்பட வேண்டும். அதேபோன்று, சிறப்பு உரிமம் பெற்று மதுபானங்கள் வழங்கப்படும் குளிர்சாதன வசதியுள்ள

உணவகங்களுக்கும், மதுபானங்கள் வழங்கப்படாத குளிர்சாதன வசதியுள்ள சாதாரண உணவகங்களுக்கும் வேறுபடுத்தி ரூ.18-க்கு பதிலாக ரூ.12 வரி விதிக்கப்பட வேண்டும்.

(17) தங்க நகைகள் மீதான வரிவீதத்தை பொறுத்த வரையில், கையினால் தயாரிக்கப்பட்ட நகைகள் மற்றும் இயந்திரம் கொண்டு தயாரிக்கப்பட்ட நகைகளை வேறுபடுத்தி வரி விதிக்க வேண்டும். கையினால் தயாரிக்கப்படும் நகைகள் பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் இந்த தங்க வேலை செய்வதில் ஈடுபட்டுள்ளதால், இதற்கு ரூ.5 வரியிலிருந்து விலக்களிக்க வேண்டும் அல்லது பெயரளவிலான ஒரு வீதத்தில் வரி விதித்திட வேண்டும்.

(18) வட்டார மொழியில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி விதிப்பிலிருந்து தமிழ்நாடு விலக்களித்து வருகிறது.

அனைத்து திரைப்படங்கள் மீதும் ரூ.28 வரி விதிப்பு என்பது இந்த மாநிலத்தில் உள்ள திரைப்படத் தொழிலை பெரிதும் பாதிக்கச் செய்யும். ஆகையால், மாநிலத்தின் வட்டார மொழியில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் குறைந்த வரி வீதத்திற்கு உட்படுத்த வேண்டும்

(19)ஜவுளி தொழிலானது அதிக வேலை வாய்ப்பு அளிக்கும் ஒரு தொழில் என்பது அனைவரும் அறிந்தது. அவர்களுடைய வாழ்வாதாரத்திற்காக பல இலட்சம் பேர் இந்த துறையைச் சார்ந்துள்ளனர்.

அனைத்து மக்களாலும் இந்தப் பொருளானது நுகரப்படுகிறது. பொது மக்கள் மீது ஏற்படக்கூடிய தாக்கத்தினைக் கருதி, ஜவுளித் தொழில் முழுவதற்கும் சரக்குகள் மற்றும் சேவைகள் வரியின் கீழ் குறைந்த வீதத்தில் ஒரே சீராக வரி விதித்திட வேண்டும் கைத்தறி ஜவுளிகளுக்கு வரி விலக்கு அளித்திட வேண்டும். ரூ.500/-க்கு கீழ் விற்கப்படும் காலணிகள் 5ரூ மற்றும் அதற்கு மேலான விலையில் விற்கப்படுபவைக்கு 28ரூ வரி விதித்திட வேண்டும்.

(20) பீடி தயாரிப்பில் பெரும்பான்மையான மக்கள், குறிப்பாக பெண்கள் ஈடுபட்டுள்ளதால் பீடி மீது குறைந்த வீதத்தில் வரி விதித்திட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x