7 ஆண்டுகள், 2 தேர்தல்கள் முடிந்தும் நடவடிக்கை இல்லை: அலுவலகம் கோரி பல்லாவரம் எம்எல்ஏ வழக்கு - அதிகாரிகள் அலட்சியத்தால் பொதுமக்கள் அவதி

7 ஆண்டுகள், 2 தேர்தல்கள் முடிந்தும் நடவடிக்கை இல்லை: அலுவலகம் கோரி பல்லாவரம் எம்எல்ஏ வழக்கு - அதிகாரிகள் அலட்சியத்தால் பொதுமக்கள் அவதி
Updated on
1 min read

பல்லாவரம் சட்டப்பேரவை தொகுதி அலுவலகம் ஒதுக்க உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் இ.கருணாநிதி எம்எல்ஏ வழக்கு தொடர்ந்துள்ளார்.

2011 சட்டப்பேரவை தேர் தலுக்கு முன்பு தொகுதிகள் மறு சீரமைக்கப்பட்டு, பல்லா வரம் தொகுதி புதிதாக உருவாக்கப் பட்டது. தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட தன்சிங் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். ஆனால், அவருக்கு அரசு சார்பில் தனியாக எம்எல்ஏ அலுவலகம் கட்டிக் கொடுக்கப்படவில்லை. பல்லாவரம், பம்மல், அனகாபுத் தூர் நகராட்சி அலுவலகங்கள், பரங்கிமலை ஒன்றிய அலுவலகத் தில் எம்எல்ஏவுக்கு அறை ஒதுக்கித் தரப்பட்டது. 2016 சட்டப்பேரவை தேர்தலில், பல்லாவரம் தொகுதியில் திமுக வேட்பாளர் இ.கருணாநிதி போட்டியிட்டு வெற்றி பெற்று, எம்எல்ஏ ஆனார். அதன்பிறகும், எம்எல்ஏ அலுவலகம் கட்டப்படவில்லை.

கடந்த முறை எம்எல்ஏவாக இருந்த தன்சிங், அதிமுகவைச் சேர்ந்தவர். மேற்கண்ட 3 நகராட்சி களின் நிர்வாகமும் அதிமுக வசம் இருந்தன. இதனால், அந்த நகராட்சி அலுவலகங்களில் அவருக்கு தனி அறை ஒதுக்கப்பட்டது.

ஆனால், திமுகவைச் சேர்ந்த இ.கருணாநிதிக்கு நகராட்சிகளில் அலுவலகம் ஒதுக்கப்படவில்லை. இதனால் அவர் குரோம்பேட்டை ராதா நகரில் உள்ள தனது வீட்டில் பொதுமக்களை சந்தித்து குறைகளைக் கேட்கிறார்.

பல்வேறு தரப்பினர், பல தரப்பட்ட கட்சியினரும் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக எம்எல்ஏவை சந்திப்பார்கள். ஆனால், வீட்டில் சென்று சந்திப் பதை பலரும் தர்மசங்கடமாக உணர்கின்றனர். பொதுமக்களும் எம்எல்ஏவின் வீட்டுக்குச் சென்று குறைகளை தெரிவிப்பதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.

பல்லாவரம் தொகுதி உருவாக்கப்பட்டு 7 ஆண்டுகள் ஆகியும், 2 எம்எல்ஏக்கள் தேர்வு செய்யப்பட்ட பிறகும், எம்எல்ஏவுக்கு தனி அரசு அலுவலகம் இல்லாதது பெரும் குறையாக உள்ளது.

எம்எல்ஏ அலுவலகத்துக்கு இடம் ஒதுக்கீடு செய்வது குறித்து, பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் நகராட்சி தனி அதிகாரிகள், நகராட்சி நிர்வாக ஆணையர், செயலாளர், காஞ்சி புரம் மாவட்ட ஆட்சியர், தமிழக சட்டப்பேரவை செயலாளர் ஆகியோருக்கு இ.கருணாநிதி எம்எல்ஏ கடந்த ஆண்டு மனு அளித்தார். இதில் சட்டப்பேரவை செயலாளர் மட்டும் பதில் அளித்தார். மற்ற யாரும் இதை கண்டுகொள்ளக்கூட இல்லை. இதனால் அலுவலகம் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் இ.கருணாநிதி வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஆட்சியாளர்கள் மறுப்பு

இதுகுறித்து ‘தி இந்து’விடம் அவர் கூறியபோது, ‘‘நான் நகராட்சித் தலைவராக இருந்த போது, அப்போதைய அதிமுக எம்எல்ஏ தன்சிங்குக்கு நகராட்சி யில் அலுவலகம் ஒதுக்கீடு செய்தேன். நான் திமுக எம்எல்ஏ என்பதால், எனக்கு அலுவலகம் ஒதுக்கீடு செய்ய தற்போதைய அதிமுக ஆட்சியாளர்கள் மறுக்கின்றனர்.

எனக்கு அலுவலகம் கேட்டு அனைத்து தரப்பு அதிகாரிகளுக் கும் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மக்கள் பிரதிநிதி யான எனக்கே இந்த நிலை. எனவே அலுவலகம் ஒதுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in