

பசும்பால் மற்றும் எருமைப்பாலின் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவிக்கக் கோரி பால் உற் பத்தியாளர்கள் சென்னையில் நேற்று பேரணி நடத்தினர்.
பசும்பால் 1 லிட்டருக்கு ரூ.35, எருமைப்பால் ரூ.45 என கொள் முதல் விலைகளை உயர்த்தி அறி விக்க வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நேற்று பேரணி நடத்தப்பட்டது.
இந்த பேரணியில் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.எம்.முனு சாமி, பொதுச் செயலாளர் கே. முகமது அலி, தமிழ்நாடு விவசாய சங்கங்கள் கூட்டு இயக்க பொதுச் செயலாளர் கே.எம். ராமகவுண்டர், ஆவின் முகவர்கள் மற்றும் தொழி லாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் எஸ்.ஏ.பொன்னுச்சாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பெ.சண் முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எழும்பூர் ராஜ ரத்தினம் அரங்கம் அருகில் தொடங்கிய இந்த பேரணியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.
பேரணியில் கலந்து கொண் டவர்கள் கோரிக்கைகளை வலியு றுத்தும் வகையில் பேனர்களை எடுத்துக்கொண்டு தலைமைச் செயலகம் நோக்கிச் சென்றனர். அப்போது அவர்கள், பசும்பால் 1 லிட்டருக்கு ரூ.35-ம், எருமைப் பாலுக்கு ரூ.45-ம் என கொள் முதல் விலையை உயர்த்த வேண்டும், கால்நடை தீவனங்கள், பசுந்தீவனம், உலர் தீவனம் ஆகிய வற்றை 50 சதவீத மானிய விலையில் வழங்க வேண்டும். பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். ஆவின் நிறுவன பால் கொள்முதல் அளவை தினமும் 50 லட்சம் லிட்டர் என அதிகரிக்க வேண்டும். முதலமைச் சர் சத்துணவு திட்டத்தில் பாலை யும் சேர்த்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.