Published : 15 Jul 2016 09:14 AM
Last Updated : 15 Jul 2016 09:14 AM

தேசிய நெடுஞ்சாலையில் பட்டப்பகலில் துணிகரம்: அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி துணை தலைவர் கொலை - அசம்பாவிதங்களை தவிர்க்க போலீஸ் குவிப்பு

தொழுப்பேடு அருகே அச்சிறுப் பாக்கம் பேரூராட்சி துணைத் தலைவர், மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். வாகன போக்குவரத்து மிகுந்த தேசிய நெடுஞ்சாலையில் பட்டப் பகலில் நிகழ்ந்துள்ள இந்த கொலைச் சம்பவம் அப்பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுப் பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் சீனிவாசன்(46). இவர், திமுகவின் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட பிரதிநிதியாகவும், அச்சிறுப்பாக் கம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவராகவும் பதவி வகித்து வந்தார். இவர், வியாழக்கிழமை தோறும் தொழுப்பேடு அருகே பெரும்பேர் கண்டிகை கிராமப் பகுதியில் உள்ள தத்தாத்ரேய கோயிலுக்கு சென்று திரும்புவது வழக்கம்.

இந்நிலையில், வழக்கம்போல் நேற்று தத்தாத்ரேய கோயிலுக்கு சென்றுவிட்டு, இருசக்கர வாகனத் தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை வழிமறித்ததாக தெரிகிறது.

இருசக்கர வாகனத்தில் இருந்து அவரை கீழே தள்ளிய மர்ம கும்பல், அரிவாளால் சர மாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. இதில், தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்த அச்சிறுப்பாக்கம் போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத் தனர். காஞ்சிபுரம் வடக்கு மண்டல ஐஜி நஜ்மல் ஹோடா, சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பேரூராட்சி துணைத் தலைவர் பட்டப் பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட தகவல் பரவிய தும், அச்சிறுப்பாக்கம் பஜார் வீதிகளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. அசம்பாவி தங்களை தவிர்க்கும் வகையில் ஆங்காங்கே போலீஸார் பாதுகாப் புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வாகன போக்குவரத்து மிகுந்த சாலையில் நிகழ்ந்துள்ள இந்த கொலை சம்பவம் அச்சிறுப்பாக் கத்தில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

இதுகுறித்து, போலீஸ் வட்டா ரங்கள் கூறியதாவது: இந்த கொலைக்கான காரணங்கள் தெரியவில்லை. எனினும், தொழில் தகராறு, குடும்ப முன்விரோதம் அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பன உள்ளிட்ட கோணங்களில் விசாரித்து வருகிறோம். கொலை யாளிகளை பிடிக்க மதுராந்தகம் டிஎஸ்பி சிவசங்கரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கொலை செய்யப்பட்ட சீனிவாசனின் உடல் செங்கல் பட்டு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. அங்கு குவிந்த திமுகவினர், கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி, உடலை வாங்க மறுத்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் செங்கல் பட்டு ஏஎஸ்பி ஜார்ஜி ஜார்ஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, உறவினர்கள் உடலை வாங்கி சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x