தமிழக மீனவர்கள் 40 பேர் இந்திய கடற்படையினரிடம் ஒப்படைப்பு

தமிழக மீனவர்கள் 40 பேர் இந்திய கடற்படையினரிடம் ஒப்படைப்பு
Updated on
1 min read

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழகம், காரைக்கால் மீனவர்கள் 40 பேர் இன்று (சனிக்கிழமை) சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மீனவர்கள் 40 பேரும் இன்று மாலை மண்டபம் வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்ததாக இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 40 மீனவர்களையும் செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1-ம் தேதியில் இலங்கை நீதிமன்றம் விடுவித்தது. மீனவர்கள் 40 பேரும் ராமேஸ்வரம், பூம்புகார், காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in