

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் அதி தீவிரமடைந்துள்ளது. சென்னை மெரினாவில் 3-வது நாளாக இளைஞர்கள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் இன்று கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் போராட்டம் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல், மதுரை மாவட்டத்தில் இன்று பல இடங்களிலும் போராட்டம் வலுத்துள்ளது. மதுரை தமுக்கம் மைதானத்தில் 10,000-க்கும் அதிகமானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை எல்லீஸ் நகரில் இளைஞர்கள் சிலர் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அலங்காநல்லூரில் 4-வது நாளாக மாணவர்கள், இளைஞர்கள், ஊர்மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதைத்தவிர கோவை, சேலம், திருப்பூர், விழுப்புரம், திருச்சி என்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சேலத்தில் போராட்டக் களத்தில் ஏராளமான குழந்தைகளும் பெண்களும் கலந்துகொண்டுள்ளனர். குடும்பத்தோடு வந்து போராட்டத்தில் பங்கெடுப்பவர்கள் சிலரையும் காண முடிந்தது.
கைக்குழந்தைகளுடன் போராட்டத்தில் உள்ள குடும்பத்தினர்