சேது சமுத்திர திட்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு வரும்: கருணாநிதி நம்பிக்கை

சேது சமுத்திர திட்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு வரும்: கருணாநிதி நம்பிக்கை
Updated on
1 min read

சேது சமுத்திரம் திட்டத்தை அதே வழியில் நிறைவேற்றுவது என மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

சென்னையில் திங்கள்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:

சேது சமுத்திரம் திட்டத்தை அதே வழியில் நிறைவேற்றுவது என மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. விரைவில் உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கிறேன்.

நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் வியூகம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும். மோடியை எதிர்த்து அத்வானி போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில் மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இது அக்கட்சியின் உள்விவகாரம். இது குறித்து பேச விரும்பவில்லை.

இந்திய சினிமாவின் 100வது ஆண்டு விழாவுக்கு என்னை அழைக்க நான் யார்? அதிமுக அரசு அறிமுகப்படுத்தியுள்ள பத்து ரூபாய் குடிநீர் பாட்டில் குறித்து கருத்து கூற விரும்பவில்லை என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in