Published : 10 Aug 2016 08:35 AM
Last Updated : 10 Aug 2016 08:35 AM

முப்பெரும் விழா விருதுகள்: திமுக அறிவிப்பு

திமுகவின் முப்பெரும் விழா விருதுகளுக்கு பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட் டுள்ளனர்.

இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திமுக முப்பெரும் விழா சென்னை அண்ணா அறிவால யத்தில் உள்ள கலைஞர் அரங் கில் வரும் செப்டம்பர் 17-ம் தேதி நடக்கவுள்ளது. முப்பெரும் விழாவையொட்டி ஆண்டு தோறும் வழங்கப்படும் விருது களான பெரியார் விருதுக்கு பேராசிரியர் அ.அய்யாசாமி, அண்ணா விருதுக்கு விஜயா தாயன்பன், பாவேந்தர் விரு துக்கு திண்டுக்கல் ஐ.லியோனி , கலைஞர் விருதுக்கு தூத்துக்குடி என்.பெரியசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டுக்கான விருதுகள் மேற்கண்ட நபர்களுக்கு வழங் கப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x