கடையடைப்பு போராட்டத்துக்கு காங்., பாஜக ஆதரவு

கடையடைப்பு போராட்டத்துக்கு காங்., பாஜக ஆதரவு
Updated on
1 min read

தமிழக காங் கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உச்ச நீதிமன்ற இடைக்கால உத்தரவுப்படி தமிழகத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்க வேண்டும். காவிரி நடுவர் மன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு சேர வேண்டிய தண்ணீரை தர வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்றுக்குழு ஆகியவற்றை உடனே அமைக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கை களை வலியுறுத்தியும், கர்நாடகத் தில் தமிழர்கள் மீது நடத்தப் பட்ட தாக்குதல்களை கண்டித்தும் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு, பிற விவசாய சங்கங்கள், வணிகர் அமைப்புகள் 16-ம் தேதி (இன்று) கடையடைப்பு போராட் டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.

தமிழக நலன் காக்கும் விஷ யத்துக்காக நடத்தப்படும் இப் போராட்டத்துக்கு காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கும். போராட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண் டர்கள் பங் கேற்க வேண்டுகிறேன் என்று தமிழக காங்கிரஸ் தலை வர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறிய தாவது: கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும், காவிரியில் தமிழகத்துக்கு உள்ள உரிமைகளை நிலைநாட்ட வலியுறுத்தியும் நடத்தப்படும் கடையடைப்புக்கு பாஜக முழு ஆதரவு அளிக்கிறது. தற்போது, தண்ணீர் திறக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு காரணமே மத்திய அரசுதான். தங்களது அணைகளில் தண்ணீர் இல்லை என்று கர்நாடக அரசு கூறியபோது, தண்ணீர் இருக்கிறது என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சகம்தான் அறிக்கை தாக்கல் செய்தது. இவ்வாறு தமிழிசை தெரிவித்துள்ளார்.

கடையடைப்பு போராட்டத்தை அமைதியாக நடத்த வேண்டும் என்று சமக தலைவர் சரத்குமார் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தி யன் யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், தமிழர் தேசிய முன்னணி தலை வர் பழ.நெடுமாறன், ஐஜேகே தலைவர் பாரிவேந்தர், பெருந் தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன், மக்கள் தேசியக் கட்சியின் நிறு வனத் தலைவர் சேம.நாராய ணன், தொமுச பொதுச் செயலாளர் மு.சண்முகம், பொதுப்பள்ளிக் கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு உள்ளிட்டோரும் கடையடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in