Published : 25 Feb 2017 09:11 AM
Last Updated : 25 Feb 2017 09:11 AM

திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்கப்படும்: கோவையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி

மத்திய அரசுடன் சுமுகமான உறவு வைத்து, அதன் திட்டங்களை தமி ழகத்தில் செயல்படுத்த ஒத்துழைப்பு அளிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

கோவை ஈஷா யோகா மைய நிகழ்ச்சிக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மதியம் கோவை வந்தார். அப்போது செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது:

பவானியாற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகளைக் கட்டுவதைத் தடுக்க தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது. நீதிமன்ற உத்தரவின்பேரில் அப்பணிகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்துக்கு ‘நீட்’ தேர்வில் விலக்கு அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பியுள் ளோம். வரும் 27-ம் தேதி பிரதமரை சந்திக்க இருக்கிறோம். அப்போது ‘நீட்’ தேர்வு தமிழகத்துக்கு உகந்தது அல்ல என்ற கோரிக்கையை முன்வைப்போம். மத்திய அரசுடன் சுமுகமான உறவு வைத்து, மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த அனைத்து உதவி களும் செய்யப்படும். 2 நாட் களுக்கு முன்பு விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமாக ரூ.2,247 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 5 நாட் களுக்குள் அந்த நிதி விவசாயி களுக்கு வழங்கப்படும்.

முன்னாள் முதல்வர் ஜெய லலிதா இறப்பு குறித்து நீதி விசா ரணை வேண்டும் என சிலர் வேண்டு மென்றே அதை தவறாகவும், புரளியாகவும் எழுப்பி வருகிறார்கள் என்றார்.

சட்டப்பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின், குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்தி யிருப்பது குறித்து கேட்டபோது, ‘சட்டப்படியே அனைத்தும் நடை பெறும். இது தொடர்பாக வழக்கு களும் தொடர்ந்துள்ளார்கள். இந்த சூழ்நிலையில் அதுகுறித்து கருத்து கூறுவது சரியல்ல’’ என்றார்.

மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், ரூ.3,523 கோடியில் அறிவிக்கப்பட்ட அவினாசி - அத்திக்கடவு திட்டம் மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப் பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் திட்டம் செயல்படுத்தப்படும். ஹைட்ரோ கார்பன் திட்டம் மத்திய அரசின் திட்டமாகும். இருப்பினும் விவசாயிகள் பாதிக்கப்படும்போது, தமிழக அரசு அவர்களுக்கான பாதுகாப்பையும், நன்மையையும் வழங்கும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x