Published : 24 Jan 2017 08:34 AM
Last Updated : 24 Jan 2017 08:34 AM

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஈசிஆரில் மறியல், ஆர்ப்பாட்டம், உள்ளிருப்பு போராட்டம்: மாணவர்கள் மீதான தடியடிக்கு கண்டனம்

ஜல்லிகட்டுக்கு நிரந்தர சட்டம் இயற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது, போலீஸார் தடியடி நடத்தியதை கண்டித்து நீலாங்கரை மற்றும் கொட்டிவாக்கம் பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தரச் சட்டம் தேவை என சென்னை மெரினாவில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், போராட் டத்தை கைவிடுத்து மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால், போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாததால் அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத் தினர்.

இதனை கண்டித்து, காஞ்சிபுரம் மாவட்டம் நீலாங்கரை மற்றும் கொட்டிவாக்கம் ஆகிய பகுதிகளில், மீனவர்கள் மற்றும் இளைஞர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும், ஓஎம்ஆர் சாலையிலும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகன நெரிசல் ஏற்பட்டது.

இதையடுத்து, அப்பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். மேலும், மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீஸார் பேச்சு வார்த்தை நடத் தினர். எனினும், சமாதானம் அடை யாத இளைஞர்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதேபோல், ஈஞ்சம்பாக்கம் மற்றும் கானத்தூர் ஆகிய பகுதி களிலும் சாலை மறியல் நடை பெற்றது. சாலை மறியலால் அப்பகுதியில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக, சோழிங்கநல்லூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதி களில் செயல்படும் சில தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப் பட்டது.

இதனால், பெற்றோர்கள் பள்ளிக்கு நேரில் வந்து தங்களது பிள்ளைகளை வீட்டிற்கு அழைத்து சென்றதால், அப்பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

உள்ளிருப்பு போராட்டம்

கடந்த ஒருவார காலமாக ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழகம் முழுவதும் அமைதியான முறையில் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை சென்னை, திருச்சி, சேலம், மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காவல்துறையினர் தடியடி நடத்தி போராட்டத்தை கலைத்துள்ளனர். இதில் சில மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. மாணவர்கள் கல்வீசி தாக்கியதில் போலீஸாரும் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தைக் கண்டித்து செங்கல்பட்டு அரசு கலை கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக் கணித்து காவல் துறையினரை கண்டித்து உள்ளிருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் ஜல்லிக் கட்டு நடத்த நிரந்தர சட்டம் கொண்டு வர வேண்டும். பீட்டாவுக்கு தடை விதிக்கவேண்டும் என்றும் தடியடி நடத்திய காவல்துறையினருக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப் பினர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் கேட்டு செங்கல்பட்டில் உண் ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு கல்லூரி மாணவர்கள் போலீஸாரின் வேண்டுகோளை ஏற்று கலைந்து சென்றனர்.

ம.ந.கூ. ஆர்ப்பாட்டம்

ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்தியவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய காவல் துறையை கண்டித்து செங்கல்பட் டில் மக்கள் நல கூட்டு இயக்கத்தினர் நேற்று செங்கல்பட்டில் ஆர்ப்பாட் டம் நடத்தினர்.

ஜல்லிக்கட்டு நடத்த நிரந் தரம் சட்டம் கேட்டு அமைதி யாக போராடி வந்த இளைஞர் கள், பொதுமக்கள், பத்திரிக்கை யாளர்கள், மாணவர் கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசி, தடியடி தாக்குதல் நடத்தி வன்முறை களமாக்கிய காவல்துறையை கண்டித்து மக்கள் நல கூட்டு இயக்கத்தின் சார்பில் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், காவல்துறையினரின் நடவடிக் கையைக் கண்டித்தும் முழக்கங் கள் எழுப்பப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சங்கர், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் தமிழரசன் உட்பட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரை பேரணி நடைபெற்றது

கம்யூனிஸ்ட் கட்சிகள்

ஜல்லிகட்டு நடத்துவதற்கு நிரந்தரச் சட்டம் இயற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x