

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மாலை நடைபெறும் தமிழக சட்டமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதை திமுக ஆதரிக்கும் என அக்கட்சித் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர் நலனில் அக்கறை கொண்டு இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழர்கள் ஆதரவற்ற அநாதைகளாக இருக்கும் நேரத்தில் அவர்கள் நலனுக்காக நிறைவேற்றப்படும் தார்மானத்திற்கு ஆதரவு அளிப்பது கடமையாக கருதுகிறேன் என்றார்.
சென்னையில் இன்று நடைபெற்ற திமுக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு கருணாநிதி இதனை தெரிவித்துள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.
காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ளாதது ஆறுதல் அளிக்கும் விசயம் மட்டுமே என்றும் கருணாநிதி தெரிவித்துள்ளார். சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்ப்பீர்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு 'சட்டமன்றத்தில் எனக்கு இடம் இல்லையே' என தெரிவித்துச் சென்றார்.