

இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக தேவைப்பட்டால் தமிழக ஆளுநரைச் சந்திப்பேன் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தொண்டர்களின் முழு ஆதரவு இருப்பதால் இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும். அவசியம் ஏற்பட்டால் இரட்டை இலை சின்னம் தொடர்பாக தமிழக ஆளுநரைச் சந்திப்பேன்.
அதிமுக சட்டவிதிப்படி கழக பொதுச்செயலாளருக்கே இரட்டை இல்லை சின்னத்தை ஒதுக்குகின்ற அதிகாரம் இருக்கிறது. ஓர் அசாதாரண நிலை உருவாகி, அந்த இடம் காலியாக இருக்கும் பட்சத்தில் தேர்வு முறையிலான கழகத்தின் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னால் கழக பொதுச்செயலாளர்தான் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க முடியும் என்ற கழக சட்டவிதி இருக்கிறது.
எனவே, கழக பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட்ட பின்னர் அந்த சின்னம் எங்களுக்கே கிடைக்கும். தற்போது அவ்விவகாரம் இந்திய தேர்தல் ஆணையத்திடம் இருக்கிறது. தொண்டர்களின் முழு ஆதரவு இருப்பதால் இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும்" என்றார்.