Published : 14 Feb 2017 07:33 AM
Last Updated : 14 Feb 2017 07:33 AM

காதலர் தினத்திலும்கூட ரோஜாவுக்கு வரவேற்பில்லை: விற்பனையாகாமல் குளிர்பதன கிடங்குகளில் தேக்கம்

காதலர் தினக் கொண்டாட்டத்தின் முக்கிய அடையாளமாகக் கருதப் படும் ரோஜா பூக்களுக்கு, இந்த ஆண்டு போதிய வரவேற்பு இல்லை. இதனால் குளிர்பதன கிடங்குகள், சந்தைகளில் ரோஜா பூக்கள் தேக்க மடைந்ததால் விவசாயிகள், வியா பாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் பிறந்ததும், காதலர்கள் பரஸ்பரம் வாழ்க்கை துணையாக் கிக் கொள்ள தங்கள் விருப்பம், சம்மதத்தை வெளிப்படுத்த தயாரா வார்கள். அந்த நாள் இன்று (பிப்.14) காதலர் தினமாக பிறந்துள்ளது. இந்த நாளில், காதலிப்பவர்கள் தங்கள் காதலை உறுதிப்படுத்தவும், காதலிக்க முடிவெடுப்பவர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்தவும் பரிசுப் பொருட்கள், பூக்களை வாங்கிக் கொடுத்து ஒருவரை ஒரு வர் மகிழ்ச்சிப்படுத்துவது வழக்கம்.

பொதுவாகவே பெண்களுக்கு பூக்கள் மீது ஈர்ப்பு உண்டு. அதனால், இளைஞர்கள் பரிசுப் பொருட்களுக் குப் பதிலாக பெண்களுக்கு பிடித்த மான ரோஜா பூக்களை அவர் களுக்கு வாங்கிக் கொடுத்து தங் கள் அன்பை வெளிப்படுத்துவதால் காதலர் தினத்தின் அடையாள மாகவும், தனித்துவமாகவும் ரோஜா பூக்கள் கருதப்படுகின்றன. இந்த பழக்கம் இந்தியாவில் மட்டு மில்லாது வளர்ந்த, வளர்ச்சி யடைந்த நாடுகளிலும் காதலர்களி டையே பெரும் தாக்கத்தையும், ஈர்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

அதனால், உள்ளூர் சந்தை முதல் சர்வதேச சந்தைகள் வரை காதலர் தின கொண்டாட்டத்தில் ரோஜா பூக்களுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. காதலர் தினத்தில் தாஜ் மஹால், அவலாஞ், பஸ்ட் ரெட், நோப்லஸ், ஆரஞ்ச், ஸ்விட் அவெஞ், பீச் அவலாஞ் போன்ற ரோஜா பூக்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன. அதனால், காதலர் தினத்தைக் குறிவைத்து கடந்த காலத்தில் ஓசூர், ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிர் பிரதேசங்களில் ரோஜா பூக்களை விவசாயிகள் சாகுபடி செய்வார்கள். தற்போது இந்தியாவில் உற்பத்தியாகும் பூக்களைவிட, ஆப்பிரிக்க நாடுகள், சீனாவில் உற்பத்தியாகும் பூக்களின் விலை மிக குறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால், கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய ரோஜா பூக்களுக்கு வெளிநாட்டு மலர் சந்தைகளில் வரவேற்பு குறைந்து வருகிறது.

இந்நிலையில், காதலர் தினத் தன்று உச்சியில் இருக்க வேண்டிய ரோஜா பூக்களின் விலை, நேற்று வீழ்ச்சி அடைந்தது. இதுகுறித்து மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தை வியாபாரி எஸ்.ஆர்.பால சுப்பிரமணி கூறியதாவது:

கடந்த ஆண்டு ரோஜா பூக்க ளுக்கு ஓரளவு வரவேற்பு இருந் தது. ஆனால், இந்த ஆண்டு முகூர்த்த நாட்களைக் காட்டிலும் விலை குறைந்துள்ளது. வரவேற்பு இருந்தால் 250 ரூபாய்க்கு விற்க வேண்டிய 20 பூக்கள் கொண்ட ஒரு பஞ்ச் (கொத்து) தாஜ்மகால் பூக்கள், நேற்று 100 முதல் 150 ரூபாய் வரையே விற்பனையாயின. ஆரஞ்ச், மஞ்சள் உள்ளிட்ட மற்ற ரோஜா பூக்கள் 60 ரூபாய் முதல் 80 ரூபாய் வரையே விற்பனையாயின என்றார்.

ஏற்றுமதி பாதியானது

வெளிநாட்டு மலர் ஏற்றுமதி யாளர் சிவா கூறியதாவது: காதலர் தின சந்தை நிலவரம், இந்த ஆண்டு மிக மோசமாக இருக்கிறது. தமிழகத்தில் கடந்த காலத்தில் 90 லட்சம், ஒரு கோடி, ஒன்றரை கோடி ரோஜா பூக்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. ஆனால், இந்த ஆண்டு 40 லட்சம் முதல் 50 லட்சம் பூக்கள் வரையே ஏற்றுமதியாகி உள்ளது.

கடந்த காலத்தில் ஊட்டி, கொடைக்கானலில் இருந்தும் பூக்கள் ஏற்றுமதியானது. தற்போது இந்த இடங்களில் கார்னேசன் போன்ற அலங்காரப் பூக்களே உற்பத்தியாகின்றன.

லாபம் இல்லாததால் அங்குள்ள விவசாயிகள் தற்போது, பசுமைக் குடோன் ரோஜா விவசாயத்தை பெரும்பாலும் கைவிட்டுள்ளனர். காதலர் தின நாட்களில் விவசாயி களின் குளிர்பதனக் கிடங்குகள், பூக்கள் இல்லாமல் காலியாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு ஆர்டர்கள் இல்லாததால் குளிர் பதனக் கிடங்குகளில் பூக்கள் தேக்கம் அடைந்துள்ளன.

மண் பரிசோதனை

கேரளம், கர்நாடகம், ஆந்திரா வில் இருந்துகூட ஆர்டர்கள் பெரி யளவில் வரவில்லை. முன்பெல் லாம் முகூர்த்த நிகழ்ச்சிகளுக்கு பூக்களுக்கு அதிகளவு செலவு செய்வார்கள். தற்போது மக்களிடம் பணப்புழக்கம் இல்லாததால் முகூர்த்த நாட்களில்கூட விலை குறைந்துவிடுகிறது. தோட்டக் கலைத் துறை அதிகாரிகள் விவ சாயிகளுக்கு மானியம் வழங்கிய தோடு, எல்லாம் முடிந்ததாக நினைத்து விடுகின்றனர். அதன் பிறகு பூக்கள் உற்பத்தி, பராமரிப் பில் கண்காணிப்பு இல்லை. விவசாயிகள், வங்கிகளில் வாங்கிய பணத்தை கட்ட முடியாமல் தவிக் கின்றனர்.

இந்த நிலையை மாற்றி தோட்டக்கலைத் துறை அதிகாரி கள் மண் பரிசோதனை செய்து, மண்ணைத் தரம் பிரிக்க விவசாயி களுக்கு உதவ வேண்டும். உற்பத்தி விவரங்களைக் கணக்கெடுத்து, அதற்கு ஏற்றாற்போல் வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்தித்தர வேண்டும். இதை செய்யாவிட்டால் 50 ஆண்டுகளானாலும் ரோஜா விவசாயிகள் முன்னேற வாய்ப் பில்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x