

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு தேதி தள்ளிப் போனாலும், தண்டனை கிடைப்பது உறுதி என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கோவையில் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் காங்கி ரஸ் கட்சி நிர்வாகி ஒருவரது இல்லத் திருமண விழாவில் பங்கேற்க வந்த ஈவிகேஎஸ் இளங் கோவன் நேற்று செய்தியாளர் களிடம் பேசியதாவது:
தமிழக தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து அனைத்து மாவட்டத் தலை நகரங்களிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தப்பட உள் ளன. மக்களுக்கு பயனுள்ள நல்ல திட்டங்களை நிறைவேற்றுவதற்கு காங்கிரஸ் கட்சி எப்போதும் முட் டுக்கட்டையாக இருந்ததில்லை. ஜி.எஸ்.டி. மசோதாவில் உள்ள அம்சங்களைப் பார்த்து அதனை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கும்.
கன்டெய்னரில் பதுக்கப்பட்டி ருந்த ரூ.570 கோடி விவகாரத்தில் இருந்து ஜெயலலிதாவை மத்திய அரசு காப்பாற்றியது. வாக்கு எண்ணிக்கை நடக்கும்போதே வாழ்த்து தெரிவித்தது உள்ளிட்ட சம்பவங்கள், அதிமுக-பாஜக இடையே உள்ள மறைமுக அரசியல் உறவை உறுதிப்படுத்து வதாகவே உள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு தேதி தள்ளிப் போனாலும், அவருக்கு தண்டனை கிடைப்பது உறுதி.
சட்டப்பேரவையில் ஆக்கப் பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என திமுக கூறியிருப்பதை வரவேற்கிறேன். மக்கள் பிரச்சினைகளுக்காக திமுக உடன் இணைந்து காங்கி ரஸ் கட்சி போராடும் என்றார்