

தமிழகத்தில் தற்போது உள்ள அரசியல் சூழ்நிலையை கருத்தில்கொண்டு உடனடியாக ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.
ஈரோட்டில் நடந்த திமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்துகொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் குழப்பங்கள் மற்றும் சூழ்நிலையை கருத்தில்கொண்டு உடனடியாக ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும். தற்போதைய பிரச்சினைக்குத் தீர்வு காண தேர்தலை நடத்தி, புதிய ஆட்சி அமைக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.