

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் இசைப் பயணத்தை பிரதிபலிக்கும் வகை யில் ‘குறையொன்றுமில்லை’ என்ற நிகழ்ச்சி பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. ‘தி இந்து’ நாளிதழுடன் பொதிகை தொலைக்காட்சி இணைந்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில் எம்.எஸ்.சுப்புலட்சுமி பற்றிய அரிய தக வல்கள் இடம் பெற்று வருகின்றன.
இந்த வார நிகழ்ச்சியில் காந்திஜியும், எம்.எஸ்.சுப்புலட்சுமி யும் சந்தித்தபோது நடந்த சுவை யான சம்பவங்கள் இடம்பெற உள்ளன. அதோடு 1947-ம் ஆண் டில் இந்தியில் ‘மீரா’ திரைப்படம் உருவான கதையும், அந்தப்படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சிகளும் இடம்பெற உள்ளன. இசைக்குயில் ‘பாரத் ரத்னா’ லதா மங்கேஷ்கர், எம்.எஸ்.சுப்புலட்சுயின் நூற் றாண்டை ஒட்டி பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘குறையொன்றுமில்லை’ தொடரை பாராட்டி சென்னை தூர்தர்ஷனுக்கு பிரத்யேகமாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த பாராட்டுக் கடிதமும், அரிய புகைப்படங்களும் இந்த வார நிகழ்ச்சியில் இடம்பெறுகின்றன.
இன்று (சனிக்கிழமை) இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கும் இந்த நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பை செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணிக்கு காணலாம்.