

புதுக்கோட்டை மாவட்டம் நெடு வாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோட்டைக் காட்டுக்கு நூற்றுக்கணக்கான சிமென்ட் மூட்டைகள், மரச் சாமான்கள் லாரியில் ஏற்றி வரப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் விசாரித்தபோது, ஓஎன்ஜிசி சார்பில் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்ட இடத்தில் சிமென்ட் தளம் அமைப்பதற்காக கொண்டுவந்துள்ளதாகத் தெரி வித்துள்ளனர். இதனால் ஆத்திர மடைந்த அப்பகுதி மக்கள், மரச்சாமான்களைப் பறிமுதல் செய்ததுடன், சிமென்ட் மூட்டை களைத் திருப்பி அனுப்பியுள்ளனர்.
கோட்டைக்காட்டில் ஓஎன்ஜிசி நிர்வாகத்தினர் கட்டுமானப் பணி யைத் தொடங்க முயன்றதாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விவசாயி ஆரோக் கியராஜ் கூறியபோது, “எரிவாயு எடுப்பதற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கு ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்ட இடத்தில் சிமென்ட் தளம் அமைப்பதாகக் கூறி, அதற்குத் தேவையான சிமென்ட் மூட்டைகள், மரப்பலகை கள் உள்ளிட்ட தளவாடச் சாமான் களை ஏற்றிக்கொண்டு வந் தனர்.
இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து மரச்சாமான்களை பறிமுதல் செய்தோம், சிமென்ட் மூட்டைகளுடன் அவர்களைத் திருப்பி அனுப்பிவிட்டோம். போராட்டம் நடந்துவரும் வேளை யில், இங்கு கட்டுமானப் பணியை தொடங்க ஓஎன்ஜிசி நிறுவனம் முயற்சி மேற்கொள்வது அதிர்ச்சி அளிக்கிறது “ என்றார்.